பாலஸ்தீனத்தின் காஸா நகரத்தின் மீதான இஸ்ரேலின் தாக்குதல் மிக தீவிரமடைந்து வருகிறது.
பாலஸ்தீனத்தின் ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த வாரம் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில், மூன்று பேர் பலியாயினர்.
இதனையடுத்து இஸ்ரேல் இராணுவம், காஸா நகரத்தின் மீது தாக்குதல் நடத்தி வருகின்றது.
இதில் இதுவரையிலும் 20 பேர் பலியாகி உள்ளனர், ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளனர், பல வீடுகள் தரைமட்டமாயின.
இந்நிலையில் எகிப்தின் பிரதமர் ஹிஷாம் குவாண்டில் காஸாவுக்கு சென்று, காயமடைந்த நபர்களை பார்த்து ஆறுதல் கூறினார்.
இஸ்ரேலிய தாக்குதல்கள் மோசமான ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் என்று வர்ணித்திருக்கும் ஜனாதிபதி முகமது முர்ஸி, காஸா பகுதியிலிருந்து எகிப்து தானாக வெளியேறாது என்றும் தெரிவித்திருக்கிறார்.
ஆர்ப்பாட்டங்கள்
இந்நிலையில் காஸா மீதான தாக்குதலை கண்டித்து மத்திய கிழக்கு நாடுகளின் சில பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன.
எகிப்தின் தலைநகர் கெய்ரோவில் உள்ள அல் அஸார் மசூதிக்கு வெளியே ஆயிரக்கணக்கான மக்கள் கூடி பாலஸ்தீனத்திற்கு ஆதரவான கோஷங்களை எழுப்பினர்.
லெபனானின் பெய்ரூட் நகரத்தில் இருக்கும் ஐ.நா அலுவலக வளாகத்திற்கு வெளியே ஆயிரக்கணக்கான மக்கள் கூடி கோஷங்களை எழுப்பினார்கள்.
மேலும் தெற்கத்திய நகரான சிடானில் இருக்கும் பாலஸ்தீன அகதி முகாம்களுக்கு வெளியிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.





0 comments: on "பாலஸ்தீனத்தின் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தும் இஸ்ரேல்: எகிப்து கடும் கண்டனம்"
Post a Comment