மும்பை:மும்பை தாக்குதல் வழக்கில் கைது செய்யப்பட்ட அஜ்மல் கசாப் இன்று காலை 7.30 மணிக்கு தூக்கிலிடப்பட்டார். இதனை மஹராஷ்டிர உள்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது. அஜ்மல் கசாப்பின் கருணை
அசாம் மாநிலத்தில் மீண்டும் வெடித்துள்ள கலவரத்தில் பலியானோர் எண்ணிக்கை 6ஆக உயர்ந்துள்ளது.
அசாம் மாநிலத்தில் போடோ பழங்குடியினருக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே கடந்த யூலை மாதம் கலவரம் மூண்டது. சுமார் 2 மாதங்கள் நீடித்த இந்த கலவரத்தில் 99 பேர் பலியாகினர், 4.80 லட்சம் பேர் வீடுகளை இழந்து முகாம்களில் தஞ்சம் புகுந்தனர். பின்னர் இராணுவம் வரவழைக்கப்பட்டு கலவரம் அடக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த வாரம் அசாமில் அதுவும் யூலை மாத கலவரத்தின்போது பெரிதும் பாதிக்கப்பட்ட கோக்ரஜார் மாவட்டத்தில் மீண்டும் கலவரம் வெடித்ததில் 2 பேர் பலியாகினர். கடந்த சில நாட்களாக நடந்த கலவரத்தில் பலியானோர் எண்ணிக்கை 6க உயர்ந்துள்ளது. இதையடுத்து கோக்ரஜார் நகரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கலவரத்தை கட்டுப்படுத்த இராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரதமர் மன்மோகன் சிங் அசாம் முதல்வர் தருண் கோகாய்க்கு நேற்றிரவு போன் செய்து மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து கேட்டறிந்தார். சில சக்திகள் அமைதி மற்றும் பாதுகாப்பை சீர்குழைக்கும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகின்றன என்றும், அவர்களின் திட்டங்களை முறியடிக்கத் தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்கும் எனவும் பிரதமர் உறுதியளித்துள்ளார். இதற்கிடையே சட்டம் ஒழுங்கு குறித்து விவாதிக்க சிறப்பு கூட்டம் ஒன்றை கோகாய் நேற்று இரவு கூட்டியபோது கலவரத்தை இரும்புக் கரம் கொண்டு அடக்குமாறு அவர் டிஜிபி மற்றும் பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
0
comments:
on "அசாம் கலவரத்தை இரும்புக்கரம் கொண்டு அடக்க உத்தரவு"
0 comments: on "அசாம் கலவரத்தை இரும்புக்கரம் கொண்டு அடக்க உத்தரவு"
Post a Comment