ஹைதராபாத்:வரலாற்று சிறப்புமிக்க சார்மினார் அருகே சட்டவிரோதமாக ஹிந்து கோவில் கட்டும் பணியை அனுமதித்துள்ள காங்கிரஸ் அரசை கண்டித்து நேற்று வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு முஸ்லிம்கள் நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து பேரணியாக சார்மினாரை நோக்கி புறப்பட்டனர்.
போலீசார் மக்களை தடுக்க சாலைகளில் தடுப்புகளை ஏற்படுத்தியிருந்தனர்.
அதனையும் மீறி ஏராளமானோர் சார்மினார் அருகே குவியத் தொடங்கினர். தடை உத்தரவு இருப்பதாகக் கூறிய போலீஸார், அவர்களை கலைந்துபோக வலியுறுத்தியதால், வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது சிலர் போலீஸார் மீது சரமாரியாக கற்களை வீசினர். இதில் போலீஸார் சிலரின் மண்டை உடைந்தது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் 2 கார்களையும், 3 மோட்டார் சைக்கிள்களையும் தீ வைத்து எரித்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும் கூட்டத்தை கலைத்தனர்.




0 comments: on "சார்மினார் அருகே சட்டவிரோத கோவில்: மக்கள் போராட்டத்தில் போலீஸ் தடியடி, கண்ணீர்புகை குண்டு வீச்சு!"
Post a Comment