தலைப்புச் செய்தி

Sunday, November 18, 2012

அமிதாப்புக்கு அடி உதை - சிவசேனா ரகளை


மராட்டிய அரசியல்வாதியும் சிவசேனா தலைவருமான பால் தாக்கரே மரணமடைவதற்கு முன்பு நடைபெற்ற சம்பவம் இது. பாலிவுட் சூப்பர் டூப்பர் ஹீரோவான அமிதாப் பச்சன் சிவசேனா தொண்டர்களிடம் சிக்கி அடிஉதைப் பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற செய்தி தற்போது வெளியாகியுள்ளது.
முன்னதாக, வியாழனன்று மும்பையில் மட்டோஸ்ரீ வீட்டில் பால்தாக்கரே சிகிச்சை பெற்றுவந்த போது அவரை நலம்விசாரிக்க அமிதாப் பச்சன் சென்றிருந்தார்.அ‌ப்போது, பால் தாக்கரேவின் உடல் ‌நிலை மோசமடைந்ததாக செய்தி வெ‌ளியானது.

இச்செய்தி கேட்டு கொதித்தெழுந்த தாக்கரே ஆதரவாளர்களில் சிலர் அமிதாபைத் தாக்கினர். பால் தாக்கரேவின் உடல்நிலை நன்றாக இருப்பதாக கூட்டத்தை கட்டுக்குள் கொண்டுவர அமிதாப் முயற்சி செய்திட்ட போதும், அதனை மதிக்காத சிவசேனா, தாக்கரேஆதரவாளர்கள் அமிதாபை தொடர்ந்து தாக்கினர்.இந்த தாக்குதலில் அமிதாபுக்கு லேசான காயம் ஏற்பட்டது.

மேலும் அவரது மேலாடை கிழிந்தது. பின்னர் அருகிலிருந்த மருத்துவமனைக்கு அமிதாப் சென்று கையில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை பெற்றுக்கொண்டுள்ளார்.இத்தகவலை அமிதாப் பச்சனே ட்வீட் செய்திருந்தார்.


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "அமிதாப்புக்கு அடி உதை - சிவசேனா ரகளை "

Post a Comment