அசைவம் சாப்பிடுபவர்கள் எல்லாம் பொய் சொல்லுவார்கள், ஏமாற்றுவார்கள், கொடுத்த வாக்கை காப்பாற்ற மாட்டார்கள், நாணயம் தவறிவிடுவார்கள், கெட்ட வார்த்தை பேசுவார்கள், வன்முறையாளர்களாக இருப்பார்கள் என்று 6 ம் வகுப்பு சி.பி.எஸ்.சி பாடப்புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.
சி.பி.எஸ்.சி. 6ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் ‘நியூ ஹெல்த்திவே' என்ற பெயரில் உள்ள பாடத்தில் ஹெல்த், ஹைஜீன், பிசியாலஜி, பாதுகாப்பு, பாலியல் கல்வி, விளையாட்டு, உடற்பயிற்சி போன்றவை பற்றி விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இதில், அசைவ உணவு சாப்பிடுபவர்கள் எளிதில் ஏமாற்றுவார்கள், பொய் கூறுவார்கள், கொடுத்த வாக்கை காப்பாற்ற மாட்டார்கள், நாணயம் தவறிவிடுவார்கள், கெட்ட வார்த்தை பேசுவார்கள், வன்முறையாளர்களாக இருப்பார்கள், செக்ஸ் குற்றங்களில் அதிகம் ஈடுபடுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
இது, அசைவம் உண்பவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மாணவப் பருவத்தில் இதுபோன்று கூறப்படும் தகவல்களால் அசைவ உணவு உண்பவர்கள் மீது தவறான கண்ணோட்டம் ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே, இதை நீக்கவேண்டும் என்று கல்வியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.





0 comments: on "அசைவம் சாப்பிடுபவர்கள் அயோக்கியர்கள் : "CBSC" பாட புத்தகத்தில் விஷமம்!"
Post a Comment