தலைப்புச் செய்தி

Monday, November 19, 2012

வலுவடைந்து வருகிறது வங்கக் கடல் புயல்



வலுவடைகிறது வங்கக் கடல் புயல் !வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மேலும் வலுவடைந்து வட தமிழகம் மற்றும் ஆந்திராவில் கனமழைக்கு வழிகோலும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.


விசாகப்பட்டினத்துக்கு 550 கி.மீ தொலைவில் உள்ள அந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மேலும் தீவிரமடைந்து தற்போது புயல் சின்னமாக உருவெடுத்துள்ளது.  

இன்று (திங்கள்) காலை இந்தத் தாழ்வு மண்டலம் புயலாக உருமாறலாம் என்றும் புயல் உருவான பின்பு அதற்கு பெயரிட உள்ளதாகவும் வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போது வங்கக் கடலில் உருவாகியுள்ள இப்புதிய புயல் ஆந்திரத்தில் கரையைக் கடந்தாலும், கரை கடந்த பிறகு காற்றழுத்தத் தாழ்வு நிலையாக வலுவிழந்து வட தமிழகத்திற்கு வர வாய்ப்புள்ளது. 

இதனால் தமிழகத்தில் அடுத்த சில நாள்களுக்கு கன மழையை எதிர்பார்க்கலாம்  என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "வலுவடைந்து வருகிறது வங்கக் கடல் புயல் "

Post a Comment