
இதில் சர்வதேச ஊடகத்துறையினர் பேர் படுகாயமடைந்தனர்.
பாலஸ்தீனத்திலுள்ள காஸா பகுதிமீது இஸ்ரேல் ஏழாவது நாளாக தொடர்ந்து விமானத்தாக்குதலை நடத்திவருகிறது. இதில் இதுவரை 111 பாலஸ்தீனர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 850 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலியானோரில் 30 மேற்பட்ட குழந்தைகளும் 40 க்கு மேற்பட்ட பெண்களும் அடங்குவர். காயமடைந்தவர்களிலும் குழந்தைகளும் பெண்களும் பெருமளவில் உள்ளனர்.
காஸாவுக்கான மூன்று பாதைகளை இஸ்ரேல் அடைத்து வைத்துள்ளதால் போதிய மருந்துகளோ உணவோ கிடைக்காமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். மின்சாரமும் காஸாவின் பெரும்பாலான இடங்களில் இல்லாமல் காஸா இருளில் மூழ்கியுள்ளது.
0 comments: on "ஏழாவது நாளாக தொடர்ந்து விமானத்தாக்குதல் தொடர்கிறது இஸ்ரேலிய கொடூரம்!"
Post a Comment