
மணலி எம்ஜிஆர் நகரை சேர்ந்த ரங்கநாதன் மனைவி செல்வி. இவரது கணவர் கடந்த ஒரு வருடத்துக்கு முன் இறந்துவிட்டார். 13 வயதில் ஒரு மகள் உள்ளார். கணவர் இறந்தபின் செல்வி, சித்தாள் வேலை செய்துள்ளார்.
அப்போது சிதம்பரம் என்பவருடன் தொடர்பு ஏற்பட்டு செல்வி கர்ப்பமானார். கடந்த மாதம் 29ம் தேதி மணலி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செல்விக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டதால் மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனையில் குழந்தையுடன் சேர்க்கப்பட்டார்.
முனியம்மாவின் அக்கா மகன் சிகிச்சை பெற்றுவரும் படுக்கைக்கு அருகேயே செல்வியும் குழந்தையும் சேர்க்கப்பட்டனர்.
இதனால், முனியம்மாவும் செல்வியும் நட்புடன் பழகினர். அப்போது செல்வி தனது கணவர் இறந்த செய்தியையும், வேறொருவருடன் ஏற்பட்ட தொடர்பால் குழந்தை பிறந்ததையும், வயது வந்த பெண் வீட்டிலிருக்கும் நிலையில் இக்குழந்தையை நான் எப்படி வளர்ப்பேன்,
இந்நிலையில் கடந்த 12ம் தேதி முனியம்மா, 100 ரூபாயை செலவுக்கு வைத்து கொள் என கூறிவிட்டு, செல்வியிடமிருந்து குழந்தையை வாங்கினார். குழந்தையை காட்டி பிச்சை எடுத்துள்ளார்.
நேற்று முன்தினம் இரவு கோயம்பேடு பஸ் நிலையத்தில் குழந்தையை வைத்து முனியம்மா பிச்சையெடுத்து கொண்டிருப்பதை அறிந்த கோயம்பேடு இன்ஸ்பெக்டர் ஷான் வின்சென்ட், அவரை பிடித்து விசாரித்தார்.
இதில் செல்வியிடம் குழந்தையை வாங்கியதை ஒப்புக்கொண்டார். அவரிடமிருந்து குழந்தையை மீட்டு செனாய் நகரில் உள்ள சைல்டு லைனில் போலீசார் ஒப்படைத்துள்ளனர்.
குழந்தையை வேறோருவருக்கு விற்றதற்காக செல்வியையும், பிச்சையெடுக்க பயன்படுத்தியதற்காக முனியம்மாவையும் போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
0 comments: on "பிறந்து 15 நாளே ஆன குழந்தையை 100 ரூபாய்க்கு விற்ற தாய் கைது"
Post a Comment