விஜய்- காஜல் அகர்வால் ஜோடியாக நடித்த துப்பாக்கி படம் தீபாவளிக்கு ரிலீசாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியுள்ளார். கலைப்புலி தாணு தயாரித்துள்ளார். இந்த படத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.
நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டின் முன்னால் முற்றுகை போராட்டமும் நடந்தது. இதையடுத்து விஜய், ஏ.ஆர்.முருகதாஸ், எஸ்.ஏ. சந்திரசேகரன், கலைப்புலி தாணு போன்றோருக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. இந்த நிலையில் கலைப்புலி தாணுவும் எஸ்.ஏ. சந்திரசேகரனும் இன்று காலை எழும்பூரில் உள்ள போலீஸ் கமிஷனர் அலு வலகத்துக்கு வந்தனர். அங்கு கமிஷனர் ஜார்ஜை சந்தித்து பேசினார்கள்.
சந்திப்பு முடிந்து வெளியே வந்த கலைப்புலி தாணு நிருபர்களிடம் கூறியதாவது:-
துப்பாக்கி படத்தில் சில காட்சிகள் தங்கள் மனதை புண்படுத்துவதாக உள்ளது என்று இஸ்லாமிய சகோதரர்கள் வருத்தப்பட்டனர். அதற்கு செவி சாய்த்து படத்தில் 5 இடங்களில் இடம் பெற்றுள்ள சர்ச்சைக்குரிய வசனங்களை நீக்கிவிட்டோம். அதை கமிஷனரை நேரில் சந்தித்து தெரிவித்தோம்.
இஸ்லாமிய சகோதரர்களையும் சந்தித்து சொல்லப் போகிறோம். 50 பிரிவாக தியேட்டர்களுக்கு சென்று வசனங்கள் எடிட் செய்யப்பட்டு வருகின்றன.
இவ்வாறு கலைப்புலி தாணு கூறினார்.




0 comments: on "முஸ்லிம் எதிர்ப்பு எதிரொலி: துப்பாக்கி படத்தில் சர்ச்சை வசனம் நீக்கம்-கலைப்புலி தாணு"
Post a Comment