தலைப்புச் செய்தி

Sunday, November 18, 2012

சிவசேனா தலைவர் பால் தாக்கரே மரணம்


Shiv Sena Bal Thackeray passes awayமும்பை:ஹிந்துதுத்துவா இயக்கமான சிவசேனாவின் தலைவர் பால்தாக்கரே இன்று மரணமடைந்தார். கடந்த ஒருவாரமாக  சுவாச கோளாறு காரணமாக மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டிருந்த பால் தாக்கரே சிகிச்சை பலனின்றி  மரணமடைந்தார்.
சிவசேனா கட்சி தலைவர் பால் தாக்கரே கடந்த சில தினங்களாக கவலைக்கிடமான நிலையில் இருந்தார். அவர் இறந்து விட்டார் என்றும், இல்லை நல்ல நிலையில் உள்ளார் என்றும் இருவேறு தகவல்களால் மக்கள் குழப்பமடைந்தனர். மரணமடைந்த செய்தியால் வன்முறை ஏற்பட்டுவிடும் என அஞ்சியே மரணமடைந்த செய்தி வெளியிடபடாமல் மறைக்கப்பட்டது என்ற தகவலும் வெளியானது.
இந்நிலையில் இன்று மாலை 3.30 மணிக்கு அவர் மரணமடைந்ததாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவரைப் பற்றி கடந்த சில தினங்களாக  நிலவி வந்த சந்தேகமும் பரபரப்பும் தீர்ந்துள்ளது.
1922-ல் பிறந்து கார்ட்டூனிஸ்டாக   அறியப்பட்டு 1960ல் அரசியல் என்ற பத்திரிக்கையை துவங்கிய பால்தாக்கரே, 1966 ல் அரசியலுக்கு வந்து சிவசேனை அமைப்பை ஏற்ப்படுத்தினார். 1987 முதல் மராட்டியம் மராட்டியர்களுக்கே என்ற கோசத்தை முன் வைத்தார். இதன்மூலம் தமிழர்களுக்கும் தென் இந்தியர்களுக்கும் எதிராக வன்முறை ஏற்ப்பட்டது. தமிழர்களின் சொத்துகள் சூறையாடப்பட்டன. பல்லாயிரகணக்கான தமிழர்கள் மும்பையை விட்டு வெளியேறினர்.
இதன் பின்  தீவிர ஹிந்துத்துவ அரசியலை மேற்கொண்டார். சங்கபரிவாளர்களின் தலைவர்களில் ஒருவராக தன்னை காட்டிக் கொண்டார். பாபர் மஸ்ஜித் இடிப்பிற்கு பகிரங்க ஆதரவை தெரிவித்தார்.
பாபர் மஸ்ஜித் இடிப்பை தொடந்து நடைபெற்ற மும்பை கலவரத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். முஸ்லிம்களின் நிறுவனங்களும் சொத்துக்களும் சூறையாடப்பட்டன . இந்த கலவரத்துக்கு பால்தாக்கரேயின் சிவசேனையை காரணமாக சொல்லப்பட்டது. மும்பை கலவரம் குறித்து விசாரணை நடத்திய கிருஷ்ணா கமிஷன், கலவரத்திற்கு காரணம் பால்தாக்கரே என்றும் கூறி அவரை கைது செய்ய வேண்டும் என்று தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார். ஆனால் தன்னை கைது செய்தால் மும்பை நகரம் பதுறி எரியும் என்று மிரட்டியதால் அவரை கடைசி வரை கைது செய்யவில்லை.
கடந்த சில வருடங்களாக வட இந்தியர்களுக்கு எதிராகவும் தனது கருத்துக்களை தெரிவித்து பரபரப்பையும், பதட்டத்தையும் ஏற்ப்படுத்தினார்.
1995-ல் மகராஷ்டிராவில் ஏற்ப்பட்ட பா. ஜ.க கூட்டணி ஆட்சிக்கு இவரே காரணம் என சொல்லப்பட்டது. இப்படி பல்வேறு பரிணாமங்களை கொண்ட பால் தாக்கரே இன்று மரணம் அடைந்தார்.
அவரின் குடும்பமும் சிவசேனையும் இன்றைக்கும் மும்பையின் அதிகார பூர்வமில்லாத அதிகார சக்தியாக வளர்ந்துவருவது குறிப்பிடத்தக்கது.
இவரின் இறுதிச் சடங்கு நாளை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே அங்கு செய்தி சேகரிக்க சென்ற பத்திரிக்கையாளர்கள் மீது சிவசேனை குண்டர்கள் தாக்குதலை நடத்தியுள்ளனர். பால்தாக்கரேவின் மரணத்தை தொடர்ந்து மும்பை மாநகரில் சுமார் 7 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு  பணியில்  ஈடுபட்டுள்ளனர்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "சிவசேனா தலைவர் பால் தாக்கரே மரணம்"

Post a Comment