
இவர் தான் உலகிலேயே மிகவும் ஏழையான, எளிமையான அதிபராக அறியப்படுகிறார். ஸ்விஸ் வங்கிக் கணக்கு இல்லாமல் அரசியல் தலைவர்களே இல்லை என்று சொல்லப்படுகிற இந்தக் காலத்தில் சாதாரண வங்கிக் கணக்குக் கூட இல்லாத எளிய அதிபர் இவர்.
தென் அமெரிக்காவில் உள்ள உருகுவே நாட்டின் அதிபராக இருப்பவர் ஜோஸ் முஜிகா (77). கிணற்று நீரையே பயன்படுத்தும் இந்தத் தேசத் தலைவருக்கு சொந்தமாக வங்கிக் கணக்கு இல்லையாம்.
தனக்கு அதிபராக இருப்பதற்குக் கிடைக்கும் சம்பளம் சுமார் ரூ.6.96 இலட்சத்தில் 90 சதவீதத்துக்கும் மேல், அதாவது ரூ.6.53 இலட்சத்தை அறக்கட்டளைக்கு வழங்கி விட்டு, மீதி தொகை ரூ.43 ஆயிரத்தில் மட்டுமே வாழ்க்கையை ஓட்டி வருகிற எளிமை இவருக்கே உரித்தானது.
உருகுவே தலைநகர் மான்ட்விடியோவில் வசிக்காமல், பல கல் தொலைவில் உள்ள சிறிய பண்ணை வீட்டில்தான் இந்த அதிபர் வசிக்கிறார். அவருடைய அந்த பண்ணை வீடுகூட மிகவும் சிதிலமடைந்த கட்டிடம் தான். வீட்டில் எந்த ஆடம்பரங்களும் இல்லை.
தன் வாழ்க்கை முறையை அவர் சிறிதுகூட மாற்றிக் கொள்ள விரும்பவில்லை முஜிகா. ஆடம்பரமான வசதிகளுடன் வாழவும், அதிபர் பதவிக்குரிய சலுகைகளைப் பெற்றுக்கொள்ள எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் ஏற்க மறுத்து விட்டார் . இவர் வீட்டில் பாதுகாப்புக்கு நிற்கின்ற காவலர்கள் இருவரைப் பார்த்துதான், அதிபர் என்று யூகித்து கொள்ள முடியும் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
மிகவும் பழைய வோக்ஸ்வேகன் பீட்டில் கார், செல்ல நாய் ஒன்றுதான் இவருடைய அரிய சொத்துக்கள்.காரின் மதிப்பு என்ன தெரியுமா? சுமார் 1300 பவுண்டுகள். அவ்வளவு தான்,
கடனுமில்லை, சொத்துமில்லை, கவலையுமில்லை என்கிறார் இந்த முன்னாள் கெரில்லா தலைவர். 2010 மார்ச்ல் தான் உருகுவே அதிபராகியிருக்கிறார்.
0 comments: on " உலகின் ஏழை அதிபராக உருகுவே நாட்டின் ஜோஸ் முஜிகா அறிவிப்பு"
Post a Comment