கெய்ரோ:ஆட்சியில் அமர்ந்தாலும், எகிப்தில் முதன் முதலாக பெரும்பான்மை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபரான முஹம்மது முர்ஸிக்கு கடுமையான சவால்கள் காத்திருக்கின்றன.
அவை
1.தேசிய நல்லிணக்கம்:2-வது கட்ட தேர்தலில் ஷஃபீக்கை விட அதிக வாக்குகளை முர்ஸி பெற்றிருந்தாலும் 12 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இன்னமும் முபாரக்கின் ஆட்சி காலத்தின் இறுதி பிரதமரான ஷஃபீக்கைத்தான் ஆதரிக்கின்றார்கள். இங்குதான் முர்ஸிக்கு கடுமையான பணி காத்திருக்கிறது. தேசிய இணக்கத்தை ஏற்படுத்த அவர் கடுமையாக உழைக்கவேண்டும். மேலும் தனக்கு எதிராக வாக்களித்த தாராளமய கொள்கையுடையவர்களையும், காப்டிக் கிறிஸ்தவர்களையும் அவர் ஈர்க்கவேண்டி உள்ளது. அதாவது இஃவானுல் முஸ்லிமீன் என்ற இயக்க சூழலில் இருந்து விடுபட்டு ஒட்டுமொத்த எகிப்துக்குமான அதிபர் என்பதை அவர் நிரூபித்தாக வேண்டும்.
அவை
1.தேசிய நல்லிணக்கம்:2-வது கட்ட தேர்தலில் ஷஃபீக்கை விட அதிக வாக்குகளை முர்ஸி பெற்றிருந்தாலும் 12 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இன்னமும் முபாரக்கின் ஆட்சி காலத்தின் இறுதி பிரதமரான ஷஃபீக்கைத்தான் ஆதரிக்கின்றார்கள். இங்குதான் முர்ஸிக்கு கடுமையான பணி காத்திருக்கிறது. தேசிய இணக்கத்தை ஏற்படுத்த அவர் கடுமையாக உழைக்கவேண்டும். மேலும் தனக்கு எதிராக வாக்களித்த தாராளமய கொள்கையுடையவர்களையும், காப்டிக் கிறிஸ்தவர்களையும் அவர் ஈர்க்கவேண்டி உள்ளது. அதாவது இஃவானுல் முஸ்லிமீன் என்ற இயக்க சூழலில் இருந்து விடுபட்டு ஒட்டுமொத்த எகிப்துக்குமான அதிபர் என்பதை அவர் நிரூபித்தாக வேண்டும்.
2-வது கட்ட தேர்தலில் தம்மை ஆதரித்த ஸலஃபிகளையும் அரவணைத்துச் செல்லும் பொறுப்பும் முர்ஸிக்கு உள்ளது.
2.உயர் ராணுவ கவுன்சில்: எகிப்தில் அதிக அதிகாரங்களை தம் வசம் வைத்திருக்கும் உயர் ராணுவ கவுன்சில்தான் முர்ஸியின் அடுத்த பெரிய சவால் ஆகும்.
உயர் கவுன்சிலுடன் எப்படி உறவைக் கையாளவுது என்பது முர்ஸிக்கு பாரதூரமான பணியாக இருக்கும் என கருதப்படுகிறது. இரண்டாம் சுற்று வாக்கெடுப்புத் தொடங்கும் போதே, உயர் இராணுவக் கவுன்சில், அதிபருக்கான அதிகாரங்களைக் குறைத்து புதிய அரசியலமைப்பு விதிகளை அறிவித்தது.
நாடாளுமன்றத்தைக் கலைத்து அதற்குரிய சட்டவாக்க அதிகாரங்களைக் கூட தற்காலிகமாக இராணுவக் கவுன்சில் தம் வசம் கொண்டுவந்தது. இராணுவத்துக்கான பட்ஜெட், தளபதிகள் நியமனம், அவர்களின் பதவிக் காலத்தை நீடிப்பது என்று இராணுவ விவகாரங்களையெல்லாம் இராணுவக் கவுன்சில் பாதுகாப்பாக தானே எடுத்துக்கொண்டுவிட்டது.
இப்படியாக எகிப்து இராணுவம் புதிய அதிபரை தனது கிடுக்குப்பிடிக்குள் வைத்திருக்கப் பார்க்கிறது. இதில் இருந்து லாவகமாக முர்ஸி எவ்வாறு செயல்படப் போகிறார் என்பதும் அனைவரது எதிர்பார்ப்பாகும்.
3.பாதுகாப்பு மற்றும் பொருளாதாரம்: முர்ஸிக்கு தனக்கு முன்னால் உள்ள அடுத்த பெரிய சவால் பாதுகாப்பு மற்றும் பொருளாதாரம் ஆகும்.
கடந்த ஆண்டு உருவான புரட்சிக்குப் பின்னால் எகிப்தில் சட்டம் ஒழுங்கு மோசமடைந்துவிட்டது.
கொலைகள், கடத்தல்கள், கார் திருட்டுக்கள், ஆயுத பாவனை என அங்கு அட்டூழியங்களுக்கு பஞ்சமில்லாத நிலைதான் தொடர்கிறது.
இதேபோல, எகிப்தில் 40 வீதத்துக்கும் அதிகமான மக்கள் வறுமைக் கோட்டுக்கு கீழேதான் வாழ்கிறார்கள். புரட்சி வெடித்த காலத்திலிருந்தே நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடையத் தொடங்கிவிட்டது. இதுவும் முர்ஸின் ஆட்சிக்கு பெரும் சவாலாகத்தான் இருக்கும்.
எகிப்தில் முதலீடுகள் மீளப் பெறப்பட்டுள்ளன, தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. பலதுறைகளிலும் தொழிற்சங்கப் போராட்டங்கள் அதிகரித்துள்ளன.
எகிப்தின் வெளிநாட்டு பணக் கையிருப்புகளும் பாதியாக குறைந்துவிட்டன என்பதையும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.
4.வளைகுடா நாடுகளின் ஒத்துழைப்பு: இஃவானுல் முஸ்லிமீன் இயக்கத்தைச் சார்ந்த ஒருவர் எகிப்திற்கு அதிபராக வருவதை வளைகுடா பிராந்தியத்தில் உள்ள சில நாடுகள் விரும்பவில்லையாம். அதனால் எகிப்துடனான வளைகுடா உறவுகள் பாதிக்கப்படலாம் என்று ஆரம்பத்திலிருந்தே கூறப்பட்டு வந்தது.
வளைகுடாவில் ஆளும் மேல்தட்டு வர்க்கங்களுக்கு எதிராக எகிப்தில் இருந்துகொண்டு இஃவானுல் முஸ்லிமீன் உறுப்பினர்கள் போராட்டத்தை தூண்டுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இச்சூழலில் அரபுலகில் முக்கிய இடத்தை வகிக்கும் எகிப்தின் அதிபரான முர்ஸி, வளைகுடா நாடுகளுடனான உறவை எவ்வாறு பேணப் போகிறார் என்பதும் கவனிக்கப்படும்.
5.இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா:முர்ஸிக்கு முன்னால் உள்ள இன்னொரு சவால் என்பது இஸ்ரேல் மற்றும் அமெரிக்க விவகாரம்.
முர்ஸி இந்த நாடுகளுடனான உறவை எப்படி வைத்துக்கொள்வார் என்பதுதான் பலராலும் கூர்ந்து எதிர்பார்க்கப்படுகிற விஷயமாகும்.
விவேகமான ரீதியில், அவர் இஸ்ரேலுடனான அமைதி ஒப்பந்தத்தை மதிப்பார் என்றும், அமெரிக்கா மற்றும் மேற்குலகுடன் நல்ல உறவை வைத்திருப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
விவேகமான ரீதியில், அவர் இஸ்ரேலுடனான அமைதி ஒப்பந்தத்தை மதிப்பார் என்றும், அமெரிக்கா மற்றும் மேற்குலகுடன் நல்ல உறவை வைத்திருப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
முர்ஸி வெற்றிப் பெற்றவுடன், எகிப்து கையெழுத்திட்ட அனைத்து சர்வதேச ஒப்பந்தங்களையும் மதிப்பதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் இங்கு அவருக்கு சவால் என்பது, நாட்டில் இருக்கின்ற மற்ற எகிப்தியர்களை, குறிப்பாக இஃவான் உறுப்பினர்களிடமிருந்து எழும் சவால்களை அவர் எவ்வாறு எதிர்கொள்வார் என்பதும் கேள்வியாக எழுந்துள்ளது. எனவே இவ்விவகாரத்தில் முர்ஸி சரியானதொரு முடிவை எடுக்கவேண்டும்.
6.காஸ்ஸா:ஃபலஸ்தீன் காஸ்ஸா எகிப்துடன் எல்லையை பங்கிடுகிறது. எகிப்தில் முர்ஸியின் வெற்றியை காஸ்ஸா மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். அவர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர். காஸ்ஸா மீதான தடைகளை விலக்குவது, எல்லையில் உள்ள பிரச்சனைகளை தீர்ப்பது போன்ற அடிப்படை விஷயங்களை முர்ஸி கவனிக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு எகிப்தியர்களிடமும், உலக முஸ்லிம்களிடமும் எழுந்துள்ளது. தன்னால் முடிந்தால் காஸ்ஸாவில் வாடும் சகோதரர்களுக்கு உணவை அனுப்புவேன் என்று முர்ஸி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
7.ஈரான் விவகாரம்: ஈரானுடனான உறவில் எகிப்தின் முந்தைய அரசுகள் சற்று இடைவெளியை பேணி வந்துள்ளன. அரபுலகில் ஷியா முஸ்லிம்களின் ஆதிக்கம் வளர்ந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் சிரியா விவகாரத்தில் ஈரானின் அணுகுமுறை விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. சிரியாவின் இஃவான்கள் ஈரான் மற்றும் ஹிஸ்புல்லாஹ்வின் நடவடிக்கையால் எரிச்சலுற்றுள்ளனர். ஆனால், இஃவானுல் முஸ்லிமீனைப் பொறுத்தவரை ஈரானுடன் நடுநிலையான போக்கையே கையாண்டு வருகிறது. எனவே ஈரானுடன் சுமூகமான உறவை பேணும் வேளையில் அமெரிக்கா மற்றும் மேற்குலகின் அழுத்தங்களையும் முர்ஸி எதிர்கொள்ள வேண்டிய சூழல் உருவாகும்.
ஆக மொத்தத்தில் பல கோணங்களிலிருந்தும் வரும் சவால்களையும் தாண்டி எகிப்தை சிறந்த முறையில் முர்ஸி வழி நடத்துவார் என நம்புவோம். அவருக்கு இறைவன் துணைபுரிவானாக!
0 comments: on "முர்ஸிக்கு காத்திருக்கும் கடுமையான சவால்கள்!"
Post a Comment