பாகிஸ்தானில் மீண்டும் இராணுவ ஆட்சி ஏற்படும் நிலை உள்ளதாக அந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதி பர்வேஷ் முஷாரப் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் வசித்து வரும் பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி பர்வேஷ் முஷாரப், அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் உள்ள ஆஸ்பென் நகரில் உரை நிகழ்த்தினார்.
அவர் பேசியதாவது, பாகிஸ்தான் பழைய நிலைக்கு(இராணுவ ஆட்சி) திரும்பிக் கொண்டிருக்கிறது. நாட்டைக் காப்பாற்றுவதற்கு மக்கள், இராணுவத்தையே மீண்டும் நாடுகின்றனர்.
பாகிஸ்தானின் அரசியல் சட்டம் மிகவும் புனிதமானது. எனினும் அதற்கு மாறாக(இராணுவ ஆட்சி) எதையாவது செய்தால் மட்டுமே நாட்டைக் காப்பாற்ற முடியும். நாம் அதைச் செய்யப் போகிறோமா? அல்லது அரசியல் சட்டத்தைத் தாங்கிப் பிடித்து, நாட்டைக் கவிழ விடப் போகிறோமா?
நான் எனது சொந்த விருப்பப்படி தாய்நாட்டிற்கு நிச்சயம் திரும்புவேன். என்னை இன்டர்போல் மூலம் கைது செய்ய வேண்டும் என்று பாகிஸ்தானில் பலராலும் கோரப்படுகிறது.
எனக்கு அதைப் பற்றிக் கவலையில்லை. இந்த ஆண்டில் தேர்தல் நடக்கும் என்று நான் கருதுவதால் நிச்சயம் நாடு திரும்புவேன். கைதாவதற்கு நான் தயாராக இருக்கிறேன்.
உயிருக்கு ஆபத்து என்றாலும் அதைப் பொருட்படுத்தாமல் நாடு திரும்புவேன் என்று கூறியுள்ளார்.





0 comments: on "பாகிஸ்தானில் மீண்டும் இராணவ ஆட்சி: முஷாரப் பரபரப்பு தகவல்"
Post a Comment