தலைப்புச் செய்தி

Tuesday, July 3, 2012

அப்துல் கலாம் போலி வேஷக்காரர்-பால்தாக்கரே


முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் போலி வேஷக்காரர், சுயநலமிக்கவர் என்று சிவசேனா தலைவர் பால் தாக்கரே கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.
ஜனாதிபதி அப்துல் கலாம் டர்னிங் பாயிண்ட்ஸ் என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.


தான் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் முக்கிய முடிவுகள் எப்படி எடுக்கப்பட்டது குறித்து கலாம் இப்புத்தகத்தில் எழுதியுள்ளார்.
இதன் அடிப்படையில், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்றதையடுத்து சோனியாவை தாம் பிரதமராக்க விரும்பியதாகவும் இருப்பினும் சோனியா கேட்டுக்கொண்டதன் காரணத்தினால் மன்மோகனை பிரதமராக்கியதாகவும் எழுதியுள்ளார்.
இதற்கு நாடு முழுவதும் அரசியல் தலைவர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்து வருகின்றன. இதுகுறித்து சிவசேனா தலைவர் பால்தாக்கரே, இத்தாலிய நாட்டை சேர்ந்தவரான சோனியா காந்தியை இந்தியாவின் பிரதமராக்குவதில் ஆட்சேபனை இல்லை என கலாம் கூறியிருப்பது அவரை கேலிக்கு ஆளாக்கியுள்ளது.


அவர் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் அவர் மீது அனைவரும் மரியாதை வைத்திருந்தனர். அவரது பதவி காலம் முடிவடைந்தாலும் அவர்மீதான மதிப்பும் மரியாதையும் குறையாமல் இருந்தது.
மேலும், கலாமின் அனுமதி கிடைக்காததால்தான் சோனியா பிரதமராகவில்லை என மக்கள் நினைத்திருந்தனர்.
ஆனால் அவரது புத்தகத்தில் இதுகுறித்து அவர் எழுதியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


கடந்த 10 வருடங்களாக அவர் இதனை வெளியிடாதது அவர் சுயநலமிக்கவர் மற்றும் போலி வேஷக்காரர் என்பதை காட்டுகிறது என கூறியுள்ளார்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "அப்துல் கலாம் போலி வேஷக்காரர்-பால்தாக்கரே"

Post a Comment