தலைப்புச் செய்தி

Tuesday, July 3, 2012

காஜி பூரில் முஸ்லிம்கள் மீது தொடரும் தாக்குதல்


உத்தரபிரதேசத்தில் ஆட்சி மாறியுள்ளதே தவிர, முஸ்லிம்களின் மீது ஏவப்படும் அடக்குமுறைகள் குறைந்த பாடில்லை.
சரியாக முப்பது நாட்களுக்கு முன், மதுரா மாவட்டம் "கோசி கோலான்" கிராமத்தில்,  குடி தண்ணீர் பிரச்சினையில் 6 முஸ்லிம்கள் அநியாயமாக கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கான வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. பலரும் காயமடைந்த அந்த மோதலில், முஸ்லிம் அல்லாத எவருக்கும் எள் முனை அளவு சேதமோ, காயமோ ஏற்படவில்லை. 10 நாட்களுக்கு முன் பிரதாப் கட் மாவட்டம்  "ஏஸ்தஹான்" கிராமத்தில் பெண் ஒருவரின் கொலையில் முஸ்லிம் ஒருவர் மீது எழுந்த சந்தேகத்தால், ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயத்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியதோடு, அவர்களின் ஆடு மாடு உள்ளிட்ட சாமான்களை கொள்ளயடித்ததொடு, அங்குள்ள ஆண்களை ஊரை விட்டே துரத்தி விட்டு அனைத்து முஸ்லிம் வீடுகளையும் தீ வைத்து கொளுத்தினர். 
இதில் 46 வீடுகள் சாம்பலானதால் ஒட்டு மொத்த குடும்பங்களும் பள்ளி ஒன்றில் ஒன்டிக்கொண்டிருக்கின்றனர். இதற்கிடையில், நேற்று (01/07) காஜி பூர் மாவட்டம் "ஓதி" கிராமத்தில் 60 வயதுடைய, தய்யிப் அன்சாரி என்பவரையும் 65 வயதுடைய முஹம்மத் சேதி அன்சாரி, என்ற  இரண்டு முதியவர்களை கடுமையாக தாக்கினர் 200 க்கும் மேல் குவிந்த, ஆதிக்க ஜாதியினர்.தட்டிக்கேட்க முயன்ற 30 வயது ஷம்ஷீரும் தாக்கப்பட்டார். காயமடைந்த மூவரும் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
தாக்குதலுக்கான விஷயம் இவ்வளவு தான், இந்த கிராமத்தில் உள்ள யாகூப் அன்சாரி என்பவர் தனது  வீட்டை "மதரசா" நடத்திக்கொள்ள கொடுத்தார். தாக்குதலுக்கு ஆளான தய்யிப், அந்த பள்ளிக்கு ஆசிரியராக செயல் பட்டார்.  இதை தவிர வேறு எந்த காரணமும் எந்த தரப்பிலும் சொல்லப்படவில்லை. 300 வீடுகள் உள்ள இந்த கிராமத்தில் 70 வீடுகள் மட்டுமே முஸ்லிம்களுக்கு உரியது. இங்கு அரபி பாடசாலை வருவதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவர்கள் தரப்பு பதில் புகாரிலும் அதை தான் சொல்லி இருக்கிறார்கள்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "காஜி பூரில் முஸ்லிம்கள் மீது தொடரும் தாக்குதல்"

Post a Comment