தலைப்புச் செய்தி

Wednesday, July 4, 2012

என்னை அமைச்சராக்க விரும்பினார் வாஜ்பாய்: அப்துல் கலாம்


நான் நாட்டின் ஜனாதிபதியாவதற்கு 4 ஆண்டுகளுக்கு முன்பு, தேசிய ஜனநாயகக் கூட்டணி அமைச்சரவையில் சேர்க்க முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தன்னிடம் விருப்பம் தெரிவித்தார் என கலாம் தெரிவித்துள்ளார்.
தான் எழுதியுள்ள டர்னிங் பாயிண்ட்ஸ் புத்தகத்தில் அப்துல் கலாம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் தலைவராக கலாம் இருந்தபோது அவரை 1998 மார்ச் 15-ம் திகதி இரவு வாஜ்பாய் இதுதொடர்பாக தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியுள்ளார்.


அப்போது, அமைச்சரவைப் பட்டியலை இறுதி செய்துவிட்டேன். உங்களையும் சேர்க்க விரும்புகிறேன் என வாஜ்பாய் கேட்டுள்ளார்.
இதற்கு கலாம், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த 2 முக்கிய திட்டங்களில் முழுமையாக பங்கேற்றிருப்பதால் அதை விட்டுவிட்டு அரசியலில் நுழையக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.


இதைக்கேட்ட வாஜ்பாய், கலாமின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு பாராட்டியுள்ளார். இவ்வாறு கலாம் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "என்னை அமைச்சராக்க விரும்பினார் வாஜ்பாய்: அப்துல் கலாம்"

Post a Comment