தலைப்புச் செய்தி

Wednesday, July 4, 2012

குஜராத் இனப்படுகொலை:சேதமான வழிப்பாட்டுத்தலங்களுக்கு இழப்பீடு வழங்கும் உத்தரவுக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!


புதுடெல்லி:கடந்த 2002-ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் மோடியின் ஆசீர்வாதத்துடன் ஹிந்துத்துவா பயங்கரவாதிகளால் அரங்கேற்றிய முஸ்லிம் இனப் படுகொலையின் போது இடித்துத்தள்ளப்பட்ட, சேதமடைந்த முஸ்லிம்களின் வழிப்பாட்டுத்தலங்களுக்கு இழப்பீடு வழங்க குஜராத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனை எதிர்த்து மோடி அரசு உச்சநீதிமன்றத்தை அணுகியது. ஆனால், இந்த உத்தரவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
குஜராத் முஸ்லிம் இனப்படுகொலையின் போது ஏராளமான முஸ்லிம்களின் வழிப்பாட்டுத் தலங்கள் ஹிந்துத்துவா பயங்கரவாதிகளால் சேதப்படுத்தப்பட்டும், அழிக்கவும் பட்டன. இதுத்தொடர்பாக கடந்த 2003-ஆம் ஆண்டு அரசு சாரா அமைப்பான Islamic Relief Committee of Gujarat (IRCG) சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், இனப் படுகொலையின்போது  சேதமடைந்த 500-க்கும் மேற்பட்ட வழிபாட்டுத் தலங்களை சீரமைக்க மாநில அரசு இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தனர்.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் பாஸ்கர் பட்டாச்சார்யா, ஜே.பி.பார்திவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு அளித்த தீர்ப்பில், இனப் படுகொலையை தடுக்க மாநில அரசு தவறிவிட்டது.
சேதமடைந்த வீடுகள், வியாபார நிறுவனங்களின் கட்டடங்களுக்கு இழப்பீடு வழங்க முன்வரும் அரசு, அதேபோன்று வழிபாட்டுத் தலங்களின் சேதத்துக்கும் நிதி உதவி அளிக்க வேண்டும்.
26 மாவட்டங்களில் சேதமடைந்துள்ள வழிபாட்டுத் தலங்கள் குறித்து அந்தந்த மாவட்டத்தின் முதன்மை நீதிபதியிடம் இழப்பீடு கோரும் மனுக்களை அளிக்கலாம். என்று உத்தரவிட்டிருந்தனர்.
உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து குஜராத் அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது.
இந்த வழக்கில் குஜராத் அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் துஷார் மேத்தா, வழக்குரைஞர் ஹேமந்திகா வாஹி ஆகியோர் வாதாடுகையில், “உயர் நீதிமன்ற உத்தரவு அரசியல் சாசன சட்டத்தின் மதச்சார்பற்ற கொள்கைக்கு முரணானது. வழிபாட்டுத் தலங்களுக்கு நிதி உதவி செய்யும் பணியை எந்த அரசும் மேற்கொள்ளவில்லை” என்றனர்.
இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கே.எஸ். ராதாகிருஷ்ணன், தீபக் மிஸ்ரா ஆகியோர் உயர் நீதிமன்ற உத்தரவுக்குத் தடை விதிக்க மறுத்துவிட்டனர். சேதமடைந்த வழிபாட்டுத் தலங்களின் எண்ணிக்கை, அதை சீரமைக்கத் தேவைப்படும் தொகை குறித்து தகவல் தெரிவிக்கும்படி குஜராத் அரசை அறிவுறுத்தியுள்ளனர்.
இந்த வழக்கு விசாரணையை ஜூலை 9-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்துள்ளனர்.
News@thoothu

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "குஜராத் இனப்படுகொலை:சேதமான வழிப்பாட்டுத்தலங்களுக்கு இழப்பீடு வழங்கும் உத்தரவுக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!"

Post a Comment