தலைப்புச் செய்தி

Sunday, June 24, 2012

எகிப்தில் ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகிறது

எகிப்தில் 30 ஆண்டுகளுக்கு மேல் சர்வாதிகார ஆட்சி நடத்தி வந்த ஜனாதிபதி ஹோஸ்னி முபாரக் மக்கள் புரட்சியின் விளைவாக பதவி விலகினார்.
எனவே புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க சமீபத்தில் தேர்தல் நடந்தது.
இந்தத் தேர்தலில் சகோதரத்துவ கட்சி வேட்பாளர் முகமது முர்சிக்கும், முன்னாள் பிரதமர் அகமது ஷாபிக்குக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.
பதிவான வாக்குகள் எண்ணப்பட்டதில் முர்சி 52.5 சதவீத ஓட்டுக்களையும், ஷாபிக் 47.5 சதவீத ஓட்டுக்களையும் கைப்பற்றியதாக தகவல்கள் வெளியாகின.
இரு தரப்பினரும் தாங்களே வெற்றி பெற்றதாக கூறிக்கொள்கின்றனர். இதனால் அங்கு ஒரு குழப்பமான நிலை நிலவுகிறது.
இந்த நிலையில் இரு வேட்பாளர்களும் தாக்கல் செய்த மனுக்களை பரிசீலிக்க வேண்டி உள்ளதால், தேர்தல் முடிவினை அறிவிப்பதை ஒரு வார காலத்துக்கு ஒத்தி வைப்பதாக தேர்தல் கமிஷன் 21ஆம் திகதி அறிவித்தது.
இந்நிலையில் இன்று தேர்தல் முடிவுகளை வெளியிடப் போவதாக தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
தேர்தல் முடிவுகளை தலைமை நிர்வாக பரூக் சுல்தான் வெளியிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "எகிப்தில் ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகிறது"

Post a Comment