ஐரோப்பிய யூனியன் நாடுகளில் நிலவும் பொருளாதார மந்த நிலையால் அமெரிக்க டொலரின் மதிப்பு அதிகரித்துள்ளது.
சர்வதேச அளவிலான வர்த்தகங்கள் பெரும்பாலும் டொலர் அடிப்படையிலேயே நடக்கின்றன. எனவே, டொலர் தேவை அதிகரித்துள்ளது.
அதற்கேற்ப, பெட்ரோலிய பொருட்கள் தேவையில் 76 சதவீதம் கச்சா எண்ணெய் இறக்குமதியை நம்பியுள்ள இந்தியா, அதை டொலர் மதிப்பில் கொள்முதல் செய்கிறது.
எனவே டொலரை சர்வதேச கரன்சி சந்தையில் கூடுதல் விலைக்கு வாங்குகிறது. எனவே, டொலருக்கு இணையாக ரூபாய் மதிப்பு தொடர் சரிவை சந்தித்து வருகிறது.
ஓராண்டிற்கு முன்பு ரூ.45 ஐ ஒட்டியிருந்த ரூபாய் மதிப்பு, நேற்று ரூ.57.37 ஆனது. இந்நிலையில் அடுத்த சில வாரங்களிலும் கரன்சி சந்தையின் போக்கு இப்படியே நீடிக்கும் என அன்னிய செலா வணி வர்த்தக டீலர்கள் தெரிவித்துள்ளனர்.
ரூபாய் மதிப்பு சரிவை தடுக்க ரிசர்வ் வங்கி நடவடிக்கைகளை எடுத்து வரும் போதிலும் அடுத்த சில நாட்களில் அது ஒரு டொலர் ரூ.58.50ஐ தொடும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
அதனால், இந்திய இறக்குமதி கடுமையாக பாதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன், பெட்ரோலிய பொருட்கள் விலை உயரவும் வாய்ப்புள்ளதாக அவர்கள் எச்சரித்துள்ளனர். |
0 comments: on "டொலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு மேலும் சரியும்: நிபுணர்கள் கணிப்பு"
Post a Comment