கெய்ரோ:எகிப்திய குடியரசின் முதல் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முஹம்மது முர்ஸிக்கு அவரது மகன் அப்துல்லாஹ் முர்ஸி எழுதியுள்ள வாழ்த்துச் செய்தியில் ‘வரம்பு மீறினால் புரட்சி தொடரும்’ என அறிவுறுத்தியுள்ளார்.
முஹம்மது முர்ஸியின் மகன் அப்துல்லாஹ் முர்ஸி தனது தந்தைக்கு அனுப்பிய வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பது: “அல்லாஹ்விற்கு கட்டுபடும் தோறும் நாங்கள் உங்களுடன் இருப்போம். நீங்கள் வரம்பு மீறினால் புரட்சி தொடரும். புரட்சிக்கு மாற்றமான முடிவுகளை நீங்கள் எடுத்தால் புரட்சி தொடரத்தான் செய்யும்” என்று தெரிவித்துள்ளார்.
தேர்தல் பிரச்சார வேளையில் முஹம்மது முர்ஸி இவ்வாறு எகிப்திய மக்களிடம் கூறினார்: “எனக்கு தவறு நேர்ந்தால் என்னை திருத்துங்கள்” என்று.
0 comments: on "வரம்பு மீறினால் புரட்சி தொடரும்’- முர்ஸியின் மகன் தந்தைக்கு அறிவுரை"
Post a Comment