நாட்டில் ஏற்பட்ட மிகப்பெரிய ஊழல் என்று கருதப்படும் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஒரு ரூபாய் கூட நஷ்டம் ஏற்படவில்லை என்று முன்னாள் மத்திய அமைச்சரும் நீலகிரி மக்களவை உறுப்பினருமான ஆ.ராசா தெரிவித்தார். |
திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே சேவூரில் நடைபெற்ற ஒன்றிய திமுக செயற் வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு ஆ.ராசா பேசியது: 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடியை நான் எடுத்துக் கொண்டதுபோல வழக்கு தொடரப்பட்டு, 15 மாதம் சிறை சென்று வந்துள்ளேன். சிஏஜி கொடுத்த அறிக்கையில் ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி நஷ்டம் என்று தெரிவித்துள்ளனர். சிபிஐ குற்றப் பத்திரிகையில் ரூ.33 ஆயிரம் கோடி நஷ்டம் என்று கூறியுள்ளனர். இவ்வழக்கில் நானே வாதாடி வருகிறேன். ஒரு ரூபாய்கூட நஷ்டம் இல்லை என்பதை நிரூபிப்பேன். ஒரு நிமிடத்திற்கு ஒரு ரூபாயாக இருந்த தொலைபேசிக் கட்டணத்தை 30 பைசாவாகக் குறைத்தது, 30 கோடி பேர் மட்டுமே பயன்படுத்திய தொலைபேசி சேவையை 90 கோடி பேர் பயன்படுத்தும் வகையில் உயர்த்தியது, ரூ.310-ஆக இருந்த சராசரி தனிநபரின் மாத தொலைபேசிக் கட்டணத்தை ரூ.100 ஆகக் குறைக்க வைத்தது ஆகியவைதான் நான் செய்த தவறுகள் என்றார். |
0 comments: on "2ஜியில் 1 ரூபாய் கூட நஷ்டம் ஏற்படவில்லை என்பதை நிரூபிப்பேன்: ஆ.ராசா"
Post a Comment