2014 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை பாஜக தெரிவிக்க வேண்டும். மதச் சார்பற்றவரே பிரதமராக வர வேண்டும் என்று பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்து இருந்தார்.
பீகார் முதல்வர் நிதிஷ் குமார் கருத்துக்கு பதில் அளித்துள்ள ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தலைவர் மோகன் பகவத் '' ஹிந்துத்வா கொள்கைகள் உயிர் வாழ ஹிந்து அமைப்புகள் ஒன்று பட வேண்டும். மேலும் ஹிந்துத்வா கொள்கையில் நம்பிக்கைக் கொண்டவரே அல்லது அதன் கொள்கைகளை எடுத்துக் கூறும் ஒருவரே இந்தியப் பிரதமராக வர வேண்டும் '' என்று தெரிவித்துள்ளார்.
பாஜக கூட்டணியில் உள்ள முக்கிய கட்சியான ஐக்கிய ஜனதா தளம் மறைமுகமாக நரேந்திர மோடிக்கு எதிராக பேசி வருவது கூட்டணிக்குள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
0 comments: on "ஹிந்துத்வா கொள்கையை பின்பற்றுவரே பிரதமராக வேண்டும் - ஆர்.எஸ்.எஸ்!"
Post a Comment