இந்தச் சந்திப்பு குறித்து இந்திய அதிகாரிகள் கூறியது: இரு தலைவர்களும் உச்சி மாநாட்டு நிகழ்ச்சிக்கு இடையில் சிறிது நேரம் சந்தித்துப் பேசினர்.
பொருளாதார நிபுணரான மன்மோகன் சிங்கிடம் ஒபாமா அவ்வப்போது ஆலோசனை பெறுவது வழக்கம். அதன் அடிப்படையில் இந்த சந்திப்பு அமைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வீழ்ச்சியடைந்து வரும் உலகப் பொருளாதாரத்தை சீரமைக்கவும், 17 நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய பொருளாதாரத்தை மீட்கவும் இரு தலைவர்களும் ஒருவருக்கொருவர் ஒத்துழைக்க ஒப்புக்கொண்டனர்.
உச்சி மாநாட்டின்போது, ஜேர்மனி பிரதமர் ஏஞ்சலா மார்க்கெல்லுடனும் மெக்ஸிகோ ஜனாதிபதி ஃபெலிப் கால்டிரோனுடனும் பிரதமர் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.
கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர், பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமரூன், பிரஞ்சு ஜனாதிபதி ஹொலாந்து, ரஷிய ஜனாதிபதி விளாதிமிர் புடின் ஆகியோரையும் பிரதமர் சந்திக்கவுள்ளார்.
பிரான்ஸில் சமீபத்தில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் சர்கோஸியை தோற்கடித்த பிறகு ஹொலாந்தை பிரதமர் சந்திப்பது இதுவே முதன்முறையாகும்.
மெக்ஸிகோவில் நடைபெறும் உச்சி மாநாட்டுக்குப் பிறகு, புதன்கிழமை ரியோ டி ஜெனிரோவில் தொடங்கும் ரியோ புவி உச்சி மாநாட்டில் பங்கேற்க மன்மோகன் பிரேசில் செல்கிறார். |
0 comments: on "பொருளாதார வீழ்ச்சி: மன்மோகன் சிங்கிடம் ஒபாமா ஆலோசனை"
Post a Comment