இரவு 10 மணி முதல் காலை 6 மணிவரை ஒலி பெருக்கியை பயன் படுத்தக்கூடாது, என்ற விதியை சுட்டிக்காட்டி, இனி, காலை ஸுபுஹ் தொழுகைக்கு ஒலி பெருக்கியில் பாங்கு சொல்லுவது கூடாது, என்று கர்நாடக மாநில ஹைகோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
மாநிலம் முழுவதும் வரும் ஜூன் 17 முதல் இந்த உத்தரவை அமல் படுத்த, போலீசுக்கு அட்வகேட் ஜெனரல் உத்தரவு பிறப்பித்து உள்ளார். இதை தொடர்ந்து பெங்களூருவில் உள்ள அனைத்து மசூதி நிர்வாகத்துக்கும் போலீஸ் கமிஷனர் காலை பாங்குக்கு தடை விதித்துள்ளார். பெங்களூருவில் செயல்படும் "ஜெய் நகர் சமிதி" என்ற அமைப்பு தொடர்ந்த வழக்கில் சொல்லப்பட்ட இந்த தீர்ப்பு குறித்து, கர்நாடக மாநில ஜமியதுல் உலமா தலைவர், முப்தி இப்திகார் அஹ்மத் உள்ளிட்ட முஸ்லிம்கள் மேல் முறையீடு செய்ய ஆலோசித்து வருகின்றனர். தமிழகத்தில் "ஆடி மாதம்" அம்மனை வழிபடவும் "மார்கழி மாதம்" அதிகாலை முதல் பக்திப்பாட்டுக்களும் கொட்டு மேளங்களும் கூம்பு வடிவ ராட்சத ஒலி பெருக்கிகளும், பயன்படுத்துவதை போலவே, கர்நாடகாவில் "ராம நவமி" மற்றும் "அனுமார் ஜெயந்தி" உள்ளிட்ட பல விழாக்களில் எந்த வரம்பும் இல்லாமல் செவில் பிய்ந்து விடும் அளவுக்கு ஒலிகள் எழுப்பப்படுவது, ஏனோ செவிட்டு நீதிபதிகளுக்கு தெரியவில்லை. முன்னாள் முதல்வர் "கருணாநிதி" ஒரு முறை நீதிமன்ற தீர்ப்பு குறித்து குறிப்பிடும் போது, அது வழங்கப்பட்ட தீர்ப்பா? அல்லது வாங்கப்பட்ட தீர்ப்பா? என்று சொன்னதை, நினைத்து பார்க்க வேண்டிய தருணம் இது.
0 comments: on "முஸ்லிம்களுக்கு எதிராக நீதிமன்றங்கள் : கர்நாடக உயர் நீதிமன்றம் பாங்கு சொல்ல தடை!"
Post a Comment