மும்பை:மும்பை தாக்குதல் வழக்கில் கைது செய்யப்பட்ட அஜ்மல் கசாப் இன்று காலை 7.30 மணிக்கு தூக்கிலிடப்பட்டார். இதனை மஹராஷ்டிர உள்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது. அஜ்மல் கசாப்பின் கருணை
இந்திய இராணுவத்தின் உளவுத்துறை முக்கிய யூனிட்டில் இருந்து ரகசிய விவகாரங்களை பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ உளவுத்துறைக்கு விற்க முயற்சித்த தொழில்நுட்ப பிரிவை சேர்ந்த ஒருவரை பிடித்து ரகசியமாக விசாரணை நடத்தப்படுகிறது.
இராணுவ உளவுப்பிரிவு யூனிட்டில் தலைமை எழுத்தராக பணியாற்றி வந்த சிவதாசன் என்ற பெயருடைய இவர், துபையில் உள்ள ஒரு உறவினர் மூலம் ஐ.எஸ்.ஐ ஏஜென்ட்டை அணுகியுள்ளார். அவரிடம் நாட்டின் ரகசிய தகவல்களை தருவதாக ஒப்புக்கொண்டு பெரும் பணமும் பரிமாற்றம் செய்ய ஏற்பாடு செய்துள்ளார்.
இது உளவு வருவாய்பிரிவு இயக்குனரக அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளதனையடுத்து சிவதாசன் ரகசியமாக கண்காணிக்கப்பட்டு வந்தார்.
இவரை இன்று அதிகாரிகள் பிடித்து விசாரித்து வருகின்றனர். இவரிடம் இருந்து குறுந்தகடுகள், பென்டிரைவ், மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல்செய்யப்பட்டுள்ளன.
0
comments:
on "இந்திய ராணுவ ரகசியங்களை ஐ.எஸ்.ஐக்கு விற்க முயன்றவரிடம் தீவிரவிசாரணை"
0 comments: on "இந்திய ராணுவ ரகசியங்களை ஐ.எஸ்.ஐக்கு விற்க முயன்றவரிடம் தீவிரவிசாரணை"
Post a Comment