தலைப்புச் செய்தி

Wednesday, June 20, 2012

குரான் குறித்து முரண்பாடான "கமென்ட்" : அமிதாபச்சன் கொடும்பாவி எரிப்பு


ஜம்ஷீத்பூர் : அமிதாப் பச்சன் நடத்தும் "கோன் பனேகா கரோர்பதி"  தொலைக்காட்சி நிகழ்ச்சியில்,  குரான் குறித்த கேள்வி ஒன்றுக்கு, குரான் மனிதர்களால் உருவாக்கப்பட்டது தான்,
என்று அமிதாபச்சன் "கமென்ட்" அடித்தார். இதை அறிந்த  முஸ்லிம்கள் கடும் கோபமடைந்தனர் . இதையடுத்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு, ஜூன் 21க்குள், பதிலளிக்கும்படி அமிதாபச்சனுக்கு "நோட்டீஸ்" அனுப்பப்பட்டுள்ளது.  இந்த  செய்தியை ஒரு உருது பத்திரிகை வெளியிட்டது. செய்தியை பார்த்த "ஜம்ஷீத்பூர்" வாசிகள் பக்ருத்தீன் அன்சாரி என்பவரது தலைமையில் ஒன்று திரண்டு "அமிதாபச்சனின் கொடும்பாவியை" செருப்பால் அடித்து,  தீ வைத்து எரித்தனர். அமிதாபச்சன், குஜராத் மாநிலத்தின் "பிராண்ட் அம்பாசிடராக" நரேந்திர மோடிக்கு நெருக்கமானவராக இருப்பதால், வேண்டுமென்றே குரான் குறித்து விஷமத்தனமான "கமென்ட்"  அடித்தாரா? என்பதை, அவர் நீதிமன்றத்துக்கு விளக்கம் அளிக்கும் போது தான் தெரிய வரும்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "குரான் குறித்து முரண்பாடான "கமென்ட்" : அமிதாபச்சன் கொடும்பாவி எரிப்பு"

Post a Comment