தலைப்புச் செய்தி

Thursday, June 21, 2012

வரலாறு காணாத வீழ்ச்சியில் இந்திய ரூபாய் மதிப்பு!


மும்பை: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
சர்வதேச பங்குச் சந்தை இன்று துவங்கியதுமே இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியை நோக்கி நகர்ந்தது. ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று காலை வர்த்தகம்  துவங்கியதும் மிகவும் சரிந்து 56.48 என்ற அளவிற்கு வீழ்ச்சி அடைந்தது.
பிறகு 11.35 மணியளவில் அதில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டு, 56.39 என்ற  அளவிற்கு உயர்ந்த நிலையில்,பிற்பகல் மீண்டும் சரிந்து 56.57 என்ற அளவிற்கு மிகககடுமையான மற்றும் வரலாறு காணாத வீழ்ச்சியை கண்டது.
நேற்று மாலை வர்த்தகம் நிறைவடையும் போது இந்திய ரூபாயின் மதிப்பு 56.15 என்ற  அளவில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
ரூபாயின் மதிப்பு வெகுவாக குறைந்து வருவதால் இந்திய ரிசர்வ் வங்கி அவசர கதியில் செயல்பட்டு ரூபாயைக் காப்பாற்ற நடவடிக்கைகளை எடுக்கலாம் என்று தெரிகிறது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவுக்கு வெளிநாட்டு நிதிகள் பெருமளவில் வந்ததால், ரூபாயின் மதிப்பு பெருமளவில் அடி வாங்காமல் தப்பியது. ஆனால் ஏப்ரல், மே மாதத்தில் அன்னிய முதலீடுகள் குறைந்ததாலும், நிதி வரவு இறங்கியதாலும் தற்போது ரூபாயின் மதிப்பு கிடுகிடுவென சரிந்து கொண்டிருக்கிறது.
தொடர்ந்து இந்த நிலை நீடிக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் அச்சம் தெரிவிக்கிறார்கள். அடுத்த சில நாட்களில் இது மேலும் மோசமாகி ஒரு டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 57 ஆக மாறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "வரலாறு காணாத வீழ்ச்சியில் இந்திய ரூபாய் மதிப்பு!"

Post a Comment