தமிழகத்திலிருந்து கேரளாவுக்குக் கடத்திச் செல்லப்பட்ட 1.5 டன் வெடிபொருள்களை தமிழக அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு அரிசி கடத்திச் செல்வதைத் தடுப்பதற்காக வட்டவழங்கல் அதிகாரிகள் அடிக்கடி சோதனை நடத்திவருகின்றனர். இன்று வழக்கம்போல் இளவன்கோடு தாலுகா வட்ட வழங்கல் அதிகாரி சுஜித் பிரமிளா தலைமையில் அதிகாரிகள் சாமியார் மடம் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ஒரு சொகுசுகார் வேகமாக வந்தது. அதை நிறுத்துமாறு கூறியும் நிற்கவில்லை. உடன் அதிகாரிகள் அந்த காரை பின் தொடர்ந்தனர். சுமார் 25 கிலோமீட்டர் தூரம் சென்ற பின்னர் கேரள மாநில எல்லைக்கு சற்று தூரத்தில் செரியகொல்லா என்ற சோதனைச் சாவடியின் தடுப்பு சுவரில் கார் மோதியது.
பின்தொடர்ந்து வந்த அதிகாரிகள் அந்த காரில் உள்ள டிரைவரை கைது செய்யதனர். காரில் சோதனை நடத்தியதில் காரில் 1.5 டன் அமோனியம் நைட்ரேட் வெடிபொருள் இருப்பது கண்டுபிடிக்கபட்டது. இது நெல்லை மாவட்டம் நாங்குனேரியில் இருந்து கேரளாவுக்கு கடத்தப்பட இருந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து விசாரணை நடத்தபட்டு வருகிறது.
0 comments: on "கேரளவுக்கு கடத்திய 1.5 டன் வெடிபொருள்கள் பறிமுதல்"
Post a Comment