ஊதிய உயர்வு, போயிங் விமான சிறப்பு பயிற்சி, இதர சலுகைகள் என பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஏர் இந்திய விமானிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதற்கு மத்திய அரசு, டெல்லி உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மத்திய விமான அமைச்சர் அஜித் சிங் 100 க்கும் அதிகமான விமானிகளை பணிநீக்கம் செய்தார். இருப்பினும் இதர விமானிகள் போராட்டத்தை கைவிடுவதாக தெரிய வில்லை.
இந்நிலையில் தங்களது போராட்டத்தை காலவரையற்ற போராட்டமாக ஏர் இந்தியா விமானிகள் அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து விமானிகள் சங்க உறுப்பினர்களின் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
கூட்டத்தில் கலந்து கொண்ட சங்க நிர்வாகி ஒருவர் கூறியது: ஏர் இந்தியா நிர்வாகத்தின் பாரபட்சத்தையும் சுரண்டலையும் கண்டித்து விமானிகள் 10 பேர் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்குவர்.
விரைவிலேயே வேலைநிறுத்தம் முடிய வேண்டும் என்றுதான் நாங்கள் விரும்புகிறோம். ஆனால், பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள 101 விமானிகளை மீண்டும் பணியில் அமர்த்தும்வரை நாங்கள் வேலைக்குத் திரும்புவது சாத்தியமில்லை.
எங்களுக்கு மிக அதிகமான சம்பளம் கொடுக்கப்படுகிறது என்ற பொய் பரப்பப்பட்டு வருகிறது. எங்கள் சம்பள ரசீதை பொது மக்களிடம் காட்டத் தயாராக இருக்கிறோம். நாங்கள் எவ்வளவு வாங்குகிறோம் என்று அவர்களே பார்த்துக்கொள்ளட்டும் என்று அந்த நிர்வாகி கூறினார்.
விமானிகள் நடத்திவரும் வேலைநிறுத்தத்தை சட்டத்துக்கு எதிரானது என்று டெல்லி உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
வேலைநிறுத்தத்தை நடத்திவரும் இந்திய விமானிகள் சங்கத்தின் அங்கீகாரத்தை ஏர் இந்தியா நிர்வாகம் ரத்து செய்துள்ளது. |
0 comments: on "எங்கள் சம்பள ரசீதை பொது மக்களிடம் காட்டத் தயாராக இருக்கிறோம்-ஏர் இந்தியா விமானி"
Post a Comment