தலைப்புச் செய்தி

Wednesday, June 27, 2012

ஊழல் புகார்: காங்கிரஸ் அமைச்சரவையில் இன்று ஒரு அமைச்சர் ராஜினாமா


இந்தியாவில் கடந்த 1989ல் இமாச்சல பிரதேச முதல்வராக இருந்த வீர்பத்திர சிங், தற்போது மத்திய சிறு, குறு மற்றும் மத்திய தர தொழில்கள் துறை அமைச்சராக இருந்து வருகிறார்.
இவர் முதல்வராக இருந்த காலத்தில் மாநிலத்தில் உள்ள தொழில் துறைகளில் முதலீடு செய்ய விரும்புபவர்கள் குறிப்பிட்ட அளவுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்திருந்தார்.


எவ்வளவு பணம் கொடுக்க வேண்டும் என்பது தொடர்பாக, வீர்பத்திர சிங் அவர் மனைவி ஐ.ஏ.எஸ் அதிகாரி மொகிந்தர் லால் மற்றும் சில தொழிலதிபர்களுடன் பேசிய பேச்சுக்கள் அடங்கிய ஓடியோ குறுந்தகடை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரான விஜய்சிங் மன்கோத்தியா, 2007ம் ஆண்டு மே மாதம் வெளியிட்டார்.


இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் 23 ஆண்டுகளுக்கு பின்னர் சிம்லா சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.
சதி மற்றும் ஊழலில் ஈடுபட்டதாக அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அவர்களுக்கு எதிராக வழக்கு தொடர போதுமான ஆதாரங்கள் உள்ளதாகவும் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.


இந்நிலையில் இவர் பதவி விலக வேண்டும் என்ற குரல் ஒலிக்க தொடங்கியதும் தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார். இன்று மதியம் பிரதமரை சந்தித்து வீரபத்திர சிங் ராஜினாமா கடிதத்தை கொடுத்துள்ளார்.


ஏற்கனவே காங்கிரஸ் அமைச்சரவையில் ஊழல் புகார்களில் சிக்கி அதிகமான அமைச்சர்கள் பதவியிழந்துள்ளனர். இந்நிலையில் தற்போது காங்கிரஸைச் சேர்ந்த வீரபத்திர சிங் சிக்கிக்கொண்டு ராஜினாமா செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுவரை ஊழல் புகாரில் சிக்கி பதவியை இழந்தவர்கள் விவரம் வருமாறு: ஸ்பெக்ட்ரம் ஊழல் புகாரில் அ. ராசா, தயாநிதி, ஐ.பி.எல்.,முறைகேட்டில் சசிதரூர், ஆதர்ஷ் குடியிருப்பு வழக்கில் மகாராஷ்ட்டிர முதல்வர் அசோக்சவான், கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா ஆவார்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "ஊழல் புகார்: காங்கிரஸ் அமைச்சரவையில் இன்று ஒரு அமைச்சர் ராஜினாமா"

Post a Comment