பிரான்ஸ் நாட்டின் கௌரவ குடிமகன் விருது, மியான்மர ஜனநாயக தலைவர் ஆங் சாங் சூகிக்கு வழங்கப்பட்டது.
மியான்மர் நாட்டின் தேசிய ஜனநாயக லீக் கட்சியின் தலைவர் ஆங் சாங் சூகி. பல ஆண்டு காலம் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சூகி தற்போது விடுதலையாகி நாடாளுமன்ற உறுப்பினராகி உள்ளார்.
இதன் பின் மியான்மர் நாட்டில் ஜனநாயக நடைமுறைகள் தலைகாட்டத் தொடங்கி உள்ளதால், பல நாடுகள் பொருளாதார தடையை விலக்கிக் கொள்ள முன் வந்துள்ளன.
இந்நிலையில் சூகி வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். தற்போது அவர் பிரான்ஸ் நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். பாரிஸ் வந்தடைந்த சூகிக்கு, பிரான்ஸ் ஜனாதிபதி பிராங்கோய்ஸ் ஹோலண்டே தனது அரண்மனையில் விருந்தளித்தார்.
இதற்கிடையே பாரிசில் நேற்று நடந்த விழாவில் அவருக்கு பிரான்ஸ் நாட்டின் கௌரவ குடிமககன் விருது வழங்கப்பட்டது.
பாரிஸ் நகர மேயர் பெர்ட்ரான்ட் டிலானோ இதற்கான சான்றிதழை சூகிக்கு வழங்கினார். இதை தொடர்ந்து சூகிக்கு பாரிஸ் நகர மேயர் மாளிகையில் மதிய விருந்தளிக்கப்பட்டது.
பிரான்ஸ் படத்தயாரிப்பாளர் லுக் பெசன் என்பவர் சூகியின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் “தி லேடி” என்ற திரைப்படத்தை கடந்த ஆண்டு வெளியிட்டார். இதற்காக இந்த விழாவில் சூகி தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
0 comments: on "பிரான்சில் சூகிக்கு கௌரவ குடிமகன் விருது"
Post a Comment