தலைப்புச் செய்தி

Wednesday, June 27, 2012

நிதி அமைச்சராக பொறுப்பேற்றார் ஜனாதிபதி மன்மோகன் சிங்


ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தனது பதவியை ராஜினாமா செய்தார்.


இதனைத் தொடர்ந்து நிதியமைச்சர் பொறுப்பை பிரதமர் மன்மோகன் சிங் பொறுப்பேற்றுள்ளார். நிதித்துறை இணையமைச்சராக பழநிமாணிக்கம் மற்றும் நமோ நாராயன் மீனா ஆகியோர் உள்ளனர்
பிரதமர் வசம் ஏற்கனவே அணுசக்தி, விண்வெளி ஆராய்ச்சி மற்றும் பொது மக்கள் குறைதீர்ப்பு மற்றும் பென்ஷன் துறை ஆகியவற்றை தன்வசம் வைத்துள்ளார்.


இந்திய பொருளாதாரம் சிக்கலான சூழ்நிலையில் நிதியமைச்சர் பொறுப்பை மன்மோகன் சிங் ஏற்றுள்ளார். நரசிம்மராவ் தலைமையிலான அமைச்சரவையில் மன்மோகன் சிங் நிதியமைச்சராக இருந்துள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் பிரதமர் மன்மோகன் சிங், ரிசர்வ் வங்கி ஆளுநராகவும் பதவி வகித்துள்ளார்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "நிதி அமைச்சராக பொறுப்பேற்றார் ஜனாதிபதி மன்மோகன் சிங்"

Post a Comment