எகிப்து முன்னாள் ஜனாதிபதி ஹோஸ்னி முபாரக்கின் (84) 32 ஆண்டு கால சர்வாதிகார ஆட்சி, கடந்த ஆண்டு மக்கள் புரட்சியால் வீழ்ந்தது.
இதையடுத்து முபாரக்குடன் அவரது மகன்கள் அலா, கமால், முன்னாள் உள்துறை மந்திரி ஹபீப் அல்- அட்லி மற்றும் 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவர்கள் மீது எகிப்து இராணுவ நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டது.
ஆனால் இன்று முபாரக்கின் தண்டனை குறித்த இறுதி தீர்ப்பு கூறப்பட்டது. அதில் போராட்டத்தின் போது பொதுமக்கள் 850 பேரை கொன்று குவித்ததாகவும், ஊழல் செய்ததாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் முபாரக்கிற்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது. இந்த தண்டனை முபாரக்குடன் கைதான அவரது மகன்கள் அலா, கமால் முன்னாள் உள்துறை மந்திரி ஹபீப் அல்- அட்லி மற்றும் 6 அதிகாரிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது என்று நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.





0 comments: on "எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி முபாரக்கிற்கு ஆயுள் தண்டனை"
Post a Comment