தலைப்புச் செய்தி

Sunday, June 3, 2012

மாவோயிஸ்டுகள் கண்ணிவெடித்தாக்குதல்: 25 பேர் கவலைக்கிடம்


சத்தீஸ்கர் மாநிலம், ஜெக்தால்பூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 19 கைதிகளை ஒரு வழக்கு தொடர்பாக கொண்டகான் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக 6 பொலிஸார் இன்று ஒரு வானில் அழைத்துச் சென்றனர்.
அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்பு, மீண்டும் அதே வானில் பொலிஸார் ஜெகதால்பூர் சிறை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர்.


அப்போது, ராய்ப்பூர்-ஜெக்தால்பூர் தேசிய நெடுஞ்சாலையில், ஜோபா கிராமம் அருகே மாவோயிஸ்டு தீவிரவாதிகள் வைத்திருந்த கண்ணிவெடியின் மீது அந்த வான் ஏறிய நொடியே சுக்குநூறாக அந்த வான் வெடித்து சிதறியது.


இந்த திடீர் தாக்குதலில், 6 பொலிஸ்காரர்களும் 19 கைதிகளும் காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் மேல் சிகிச்சைக்காக ராய்ப்பூர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "மாவோயிஸ்டுகள் கண்ணிவெடித்தாக்குதல்: 25 பேர் கவலைக்கிடம்"

Post a Comment