சிரியாவில் ஜனாதிபதி பஷர் அல் அசாத்திற்கு எதிரான போராட்டம் வலுத்து வருகிறது.
ஐ.நா. சபையின் முன்னாள் பொதுச் செயலாளர் கோபி அனான் மேற்கொண்ட போர் நிறுத்த உடன்படிக்கை எதிர்பார்த்த பலன் அளிக்கவில்லை.
அங்கு ஹோவுலா என்ற இடத்தில் சமீபத்தில் வீடுகளில் புகுந்து 108 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், உலகளாவிய கண்டனத்துக்கு வழி வகுத்தது.
அந்த அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டு இருப்பதற்கு ஆதாரமாக, அவர்களை பெரிய குழி தோண்டிப் புதைத்திருப்பதை அமெரிக்க செயற்கைக் கோள் படம் பிடித்திருக்கிறது. இது தொடர்பான புகைப்படங்கள் அமெரிக்க அரசு இணையத்தளத்திலும் வெளியிடப்பட்டுள்ளன.
சிரியாவில் கடந்த 14 மாதங்களாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் உள்நாட்டுப்போரில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்களும் கொல்லப்பட்டிருப்பது சர்வதேச நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.









0 comments: on "அப்பாவி பொதுமக்களை கொன்று குவித்த சிரியா: ஆதாரத்தை வெளியிட்டது அமெரிக்கா"
Post a Comment