அப்பாவி முஸ்லிம்களை தீவிரவாத குற்றச்சாட்டின் பெயரால் கைது செய்வது அநியாயம். இது, முஸ்லிம்களுக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ். செய்யும் சூழ்ச்சி என்றார், லோக் ஜன சக்தியின் தலைவர் ராம் விலாஸ் பாஸ்வான்.
அப்பாவி முஸ்லிம்களை கைது செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்த்திய பாஸ்வான், உள்ளூர் போலீஸ் துணையில்லாமல் கைது செய்யக்கூடாது, கைது செய்யப்படும்போது ஆவனங்களில் கையெழுத்து பெற வேண்டும், சாட்சிகள் ஒப்பம் பெற வேண்டும், கைது செய்யப்படுபவரின் குடும்பத்துக்கு தொலைபேசி தகவல் கொடுக்க வேண்டும், 48 மணி நேரத்துக்குள் மருத்துவ சோதனை நடத்தப்பட்டு ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும், என்பது போன்ற சுப்ரீம் கோர்ட்டின் எந்த உத்தரவுகளையும் மதிக்காமல், முஸ்லிம்களை கொத்து கொத்தாக கைது செய்வது கண்டிக்கத்தக்கது. இந்த அநியாயத்தை எதிர்த்து பாதிக்கப்பட்ட தர்பங்கா மாவட்டத்திலும், மாநில தலை நகரம் பாட்னாவிலும், டெல்லியிலும் மாபெரும் போராட்டங்களை நடத்தப்போவதாகவும், லோக் ஜன சக்தியின் தலைவர் ராம் விலாஸ் பாஸ்வான் அறிவித்தார். அடுத்த பாராளுமன்ற கூட்டத்தொடரிலும் குரல் கொடுப்பேன் என்றும் சொன்னார் அவர். பேட்டியின் போது, பீகார் எஞ்சினியர் "பஸிஹ் மஹ்மூத்" மனைவி நிக்கத் பர்வீன், கைது செய்யப்பட்டுள்ள "கபீல் அக்தரின்" சகோதரர் சுஹைல் அக்தர், சிறைப்படுத்தப்பட்டுள்ள "பத்திரிக்கையாளர் காசிமி"யின் மகன் ஷோசப் காசிமி, 14 ஆண்டுகளை சிறைக்கொட்டடியில் கழித்து, நிரபராதி என தீர்ப்பு வழங்கப்பட்டு விடுதலையான, ஆமிர் கான் உள்ளிட்ட பலரும் கலந்துக்கொண்டனர். ஆமிர் கான் குறிப்பிடுகையில், சமீபத்தில் சிறையில் கொல்லப்பட்ட கதீலுக்கு ஏற்ப்பட்ட நிலை போல தனது உயிருக்கும் பல முறை ஆபத்து ஏற்பட்டதையும் நினைவு கூர்ந்தார்.
0 comments: on "ஆர்.எஸ்.எஸ். சூழ்ச்சியால் தான் முஸ்லிம்கள் கைது -பாஸ்வான்"
Post a Comment