தலைப்புச் செய்தி

Thursday, June 21, 2012

அலுவலக பணியாளர்களுக்கு வரும் ஆபத்துக்கள்….


எந்த நேரமும் வேலை வேலை என‌ அதிலேயே மூழ்கிப் போகிறவர்களா நீங்கள்…? உங்களுக்கெல்லாம் ஒரு எச்சரிக்கை, பணி சார்ந்த நோய்கள் தற்போது பெருகிவருகின்றன என்று ஆய்வு மூலம் கண்டறிந்துள்ளனர்.
சுமார் 2 கோடி இந்தியர்கள் வேலையால் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு அவதிக்கு உள்ளாகி இருக்கின்றார்களாம்.
பணியிட பாதிப்பு என்றால், சுரங்க வேலை பார்ப்பவருக்கு நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள், ஆழ்கடலில் மூழ்கி ஆய்வு செய்வோருக்கு ஏற்படும் காயங்கள், கோழிப்பன்னைத் தொழிலாளர்களுக்கு வரும் ‘பேரட் பீவர்’ என்றில்லை.
‘ஒயிட்காலர் ஜாப்’ எனப்படும் அலுவலகப் பணிபுரிவோருக்கு அனேக பாதிப்புகள் ஏற்படலாம்.
உங்களின் இருக்கை முறைப்படி வடிவமைக்கப் பட்டதாக இருந்தால், நீங்கள் 6 முதல் 8 மணி நேரம் கம்ப்யூட்டர் முன் அமர்ந்து இருக்கின்றீர்கள் என்றால் உங்களுக்கு முதுகுவலி, மணிகட்டு வலி போன்ற பிரச்சனைகள் வரிசை கட்டி வரும். ஆனால் ச்ம்பந்தப் பட்டவர்கள் அதை உணர்வது அரிதே.
சுமார் 1.9 கோடி இந்தியர்கள் பணியிடப் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். அவர்களில் 1.20 லட்சம் பேர் ஆயுளை இழக்கின்றனர் என்கிறது ‘பணியிட வியாதிச் சிகிச்சை மற்றும் கட்டுப்பாட்டுக்கான தேசிய திட்டத்தின்’ புள்ளிவிவரம். இது உலக அளவில் 17 சதவீதம். மரணத்தை ஏற்ப்படுத்துவதில் பணியிடப் பாதிப்புகள் 10 வது பெரிய காரணமாக உள்ளன என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகின்றது.
“இந்தியர்களில் 43 சதவிகிதம் பேர் பணிபுரிபவர்கள். எனவே அலுவலக பாதிப்புகளை நாம் சீரியசாக எடுத்துக்கொள்ள வேண்டும்” என்கிறார், அகமதாபாத்தில் உள்ள நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் ஆக்கு பேஷனல் ஹெல்த் இயக்குநர்.
நாள் முழுவதும் உட்கார்ந்து செய்யும் வேலை, புகைப்பழக்கத்துக்கு இணையாக மோசமானது என்கின்றார்கள் மருத்துவர்கள். அது ‘டைப்2′ சர்க்கரை நோய், இதய நோய், உடல் பருமன் போன்ற பாதிப்புகளுக்கு அழைத்துச் செல்லலாம். ஒரு நாளைக்கு 6 மணி நேரத்துக்கு மேல் உட்கார்ந்து வேலை செய்பவர்களுக்கு, ஒடி ஆடி வேலை செய்யும் மற்றவர்களை விட அதிக எடை போடும் வாய்ப்பு இரண்டு மடங்காம். மணிகணக்கில் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வதால் ஏற்படும் பாதிப்பை உடற்பயிற்சி கூட போக்காது என்கிறார்கள்.
‘இருக்கைப் பணி’ புரிபவர்கள், ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை 10 நிமிட இடைவெளி எடுத்துக்கொள்ள வேண்டும், சோம்பல் முறிப்பது போன்ற எளிய பயிற்சிகள் கூட நன்மை பயக்கும் என்று ஆலோசனை கூறுகின்றார்கள் மருத்துவர்கள்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "அலுவலக பணியாளர்களுக்கு வரும் ஆபத்துக்கள்…."

Post a Comment