ஈரான் அணு ஆயுதங்களை தயாரித்து வருகிறது என அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் குற்றம் சுமத்தி உள்ளதுடன், பல்வேறு பொருளாதார தடைகளையும் விதித்துள்ளன.
மேலும் ஈரான் தன்னுடைய அணுசக்தி திட்டங்கள் குறித்தத் தகவல்களை வெளியிட மறுப்பதுடன், அணு ஆயுதம் தயாரிக்க நினைக்கும் நோக்கத்தையும் வெளிப்படுத்த மாட்டேன் என்கிறது.
தன்னுடைய அணுவிசை நிலையங்கள் அனைத்தும் ஆக்கப்பூர்வமான உற்பத்திக்குத்தான் என்று இடைவிடாமல் சொல்கிறது.
ஆனால் இஸ்ரேலும், அமெரிக்காவும் ஈரானை நம்ப மறுக்கின்றன. எனவே ஈராக்கில் அணு ஆயுதத்தை சதாம் உசைன் மறைத்து வைத்திருப்பதாகக் கூறி அதிரடியாக உள்ளே நுழைந்ததைப் போல ஈரானிலும் செய்ய அமெரிக்கா தலைமையிலான நேச நாடுகள் விரும்புகின்றன. ஆனால் ஈரானுக்கு எப்போதும் உற்ற தோழனாக ரஷ்யா விளங்குகிறது.
இப்போதைக்கு ஈரான் சொல்வதையெல்லாம் முழுக்க நம்புவதற்கு ரஷ்யா தயார் இல்லை என்றாலும் ஈரான் மீது பிற வல்லரசு நாடுகள் கைவைக்காமல் தடுக்க நினைக்கிறது.
இதற்கிடையே இந்தியா உள்ளிட்ட 7 நாடுகளுக்கு அமெரிக்க அரசு நேரடியாகவும் மறைமுகமாகவும் விடுத்த எச்சரிக்கைகள் பலன்தரத் தொடங்கியிருக்கின்றன.
ஈரானுடன் பொருளாதார உறவு கொண்டு அந்நாட்டை ஆதரிக்காதீர்கள் என்று அமெரிக்கா அரசு கூறிவருகிறது.
இந்நிலையில் இன்று ஈரானுடன் ரஷ்யா, பிரான்ஸ், பிரிட்டன், ஜேர்மனி மற்றும் அமெரிக்க போன்ற நாடுகள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளன.
0 comments: on "அணு ஆயுத விவகாரம் தொடர்பாக வல்லரசு நாடுகள் ஈரானுடன் இன்று பேச்சுவார்த்தை"
Post a Comment