கடந்த மார்ச் மாதத்தில் 1349 மருத்துவர்கள் 10 (A) (1) என்ற டி.என்.பி.எஸ்.சியின் சிறப்பு விதி மூலம் பொது சுகாதார துறையில் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். தமிழகத்தில் அனைத்து அரசு வேலை வாய்ப்புகளிலும் 3.5% இடஒதுக்கீடு முஸ்லிம்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்ற சட்டம் அமலில் இருக்கும் நிலையில் மேற்கண்ட தேர்வில் 1349 நபர்களில் 47 நபர்கள் முஸ்லிம்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் ஒரு முஸ்லிம் மருத்துவர் கூட தேர்ந்தெடுக்கப்படவில்லை.
மேலும் பொது வகுப்பு (General Quota) முஸ்லிம்கள் ஒருவரும் தேர்ந்தெடுக்கப்படவில்லை. இது முற்றிலும் சட்டத்திற்கு புறம்பானது, கண்டிக்கத்தக்கது. எனவே மேற்கண்ட தேர்வுக்கு தமிழக அரசு உடனடியாக இடைக்கால தடை விதித்து 3.5% முஸ்லிம் இடஒதுக்கீடு அடிப்படையில் மறு தேர்வு நடத்தி முஸ்லிம்களையும் தேர்வு செய்து நீதி செலுத்த வேண்டும். மேலும் 3.5% முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டை புறக்கணித்து தேர்வு நடத்திய அதிகாரிகள் மீது தமிழக அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் தமிழகத்தில் முஸ்லிம்களுக்கான 3.5% இடஒதுக்கீடு கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பது பற்றி தமிழக அரசு உடனடியாக சட்டமன்றத்தில் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
மத்திய அரசால சிறுபான்மையினர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்ட 4.5% இடஒதுக்கீட்டை எதிர்த்து ஆந்திர உயர் நீதிமன்றத்திலும் மேல்முறையீட்டிற்காக உச்ச நீதிமன்றத்திலும் தொடுக்கப்பட்ட வழக்கில் மத்திய ஆளும் காங்கிரஸ் அரசு ஒரு கொள்கை முடிவு சம்பந்தமான வழக்கு நீதிமன்றத்தி வரும்போது எத்தகைய அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டுமோ அத்தகைய அக்கறையை இவ்வழக்கில் காட்டாதது கண்டிக்கத்தக்கது.
மேலும் இது முஸ்லிம்களூக்கு மத்திய அரசு இழைத்த துரோகம், அநீதி, மற்றும் அரசியல் நாடகம் போல் மத்திய அரசின் நடவடிக்கை தெரிகிறது. எனவே மத்திய அரசு இது விஷயத்தில் உடனடியாக தலையிட்டு இழந்த உரிமையை பெற்றுத்தரும் வகையில் 4.5% இடஒதுக்கீட்டை காக்க ஆவணை செய்யவேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.

இதனை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக ஜூன் 16 அன்று சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாலை 4மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநில செயற்குழு உறுப்பினர் அகமது ஃபக்ருதீன் கண்டன உரை நிகழ்த்தினார். சென்னை மாவட்ட தலைவர் முஹம்மது நாஜிம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் முஹம்மது ஷாஹித் மற்றும் பலர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.
0 comments: on "மருத்துவ தேர்வாணயக்குழுவை கண்டித்து சென்னையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆர்ப்பாட்டம்!"
Post a Comment