வங்கதேசத்தில் தென்மேற்கு மலை பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது, இதனால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது.
நிலச்சரிவில் சிக்கி சுமார் 83 பேர் பலியாகி உள்ளனர், மேலும் பலர் கட்டிட இடிபாடுகளில் சிக்கி இறந்திருக்க கூடும் என்றும், பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்க கூடும் என்றும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதில் மிகக் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ள காக்ஸ் பஜார் பகுதியில் மட்டும் 34 பேர் இறந்துள்ளனர், மேலும் பந்தர்தன் மற்றும் சிட்டகாங் பகுதியில் பலர் உயிரிழந்துள்ளனர் என்று இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
நிலச்சரிவால் பல இடங்களில் சாலைப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது, பல்லாயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளதால் 50,000க்கும் மேற்பட்டோர் வீடில்லாமல் தவிக்கின்றனர்.
இருப்பினும் விரைவில் போக்குவரத்து சரிசெய்யப்பட்டு அத்தியாவசிய பொருட்கள் பொது மக்களை சென்றடையும் என அதிகாரப்பூர்வ செய்திகள் தெரிவிக்கின்றன.
0 comments: on "வங்கதேசத்தில் நிலச்சரிவு: 83 பேர் பலி, 50000 பேர் பாதிப்பு"
Post a Comment