மும்பை:மும்பை தாக்குதல் வழக்கில் கைது செய்யப்பட்ட அஜ்மல் கசாப் இன்று காலை 7.30 மணிக்கு தூக்கிலிடப்பட்டார். இதனை மஹராஷ்டிர உள்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது. அஜ்மல் கசாப்பின் கருணை
பீகாரில் ரன்வீர் சேனா அமைப்பின் தலைவர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலத்தில் நிலச்சுவான் தாரர்களுக்கும் அங்குள்ள தலித்துகளுக்கும் மோதல்கள் ஏற்படுவது வழக்கம்.
நிலச்சுவான் தாரர்களுக்காக உருவாக்கப்பட்ட ரன்வீர் சேனா என்ற அமைப்பின் தலைவராகவும் உள்ளவர் பிரம்மேஷ்வர் சிங் என அழைக்கப்படும் முக்ஹியா.
இவர் மீது கடந்த 1996-ல் லக்மிபூர் மாவட்டத்தில் 61 தலித்துகள் படுகொலைசெய்யப்பட்ட வழக்கு, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.
இந்நிலையில் இன்று போஜ்பூர் மாவட்டத்தின் கைத்ரா மொகல்லா அருகே நவாடா பொலிஸ் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் அதிகாலை நடைபயிற்சி மேற்கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியுள்ளது. இதுகுறித்து பீகார் மாநில பொலிஸார் விசாரணை நடத்துகின்றனர்.
0
comments:
on "பீகாரில் ரன்வீர் சேனா அமைப்பின் தலைவர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை"
0 comments: on "பீகாரில் ரன்வீர் சேனா அமைப்பின் தலைவர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை"
Post a Comment