தலைப்புச் செய்தி

Saturday, June 16, 2012

ஏனைய செய்தி ஜப்பான் மீது ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடை


ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு பொருளாதார தடை விதிக்க அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகள் முடிவு செய்துள்ளன.
மேலும் இறக்குமதியை குறைக்க ஜுலை மாதம் 1ஆம் திகதி வரை கெடு விதித்திருக்கிறது.
இந்தியா உள்பட 7 நாடுகள் இறக்குமதியை குறைத்ததால் விதிவிலக்கு அளிப்பதாக சமீபத்தில் அமெரிக்கா அறிவித்தது.
ஆனால் இவ்விவகாரத்தில் ஜப்பான் நிலை குறித்து பின்னர் முடிவு செய்யப்படும் என கூறி இருந்தன.
இந்நிலையில் ஜப்பான் நாடாளுமன்ற கீழ் சபையில் ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு இன்சூரன்ஸ் செய்ய வகை செய்து சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேறியது.
பின்னர் இது மேல் சபையிலும் தாக்கல் ஆனது. இந்த நடவடிக்கை ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளின் கொள்கைக்கு எதிராக அமைந்துள்ளதால் ஜப்பான் மீது பொருளாதார தடை விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "ஏனைய செய்தி ஜப்பான் மீது ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடை"

Post a Comment