மியான்மரில் ஜனநாயகத்துக்காக போராட்டம் நடத்தி வரும் ஆங் சாங் சூகி 21 ஆண்டுகளுக்குப் பிறகு நோபல் பரிசை ஏற்றுக் கொண்டு உரையாற்றினார்.
மியான்மரில் ஜனநாயகத்துக்காகப் போராடியதால் 15 ஆண்டுகளுக்கு மேலாக விட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தார் ஆங் சாங் சூகி.
அவருக்கு 1991ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. ஆனால் ஆங் சாங் சூகியால் நேரில் சென்று நோபல் பரிசை பெற்றுக் கொள்ள முடியவில்லை. அவரது மகன்கள் கிம் மற்றும் அலெக்சாண்டர் ஆகியோர் தான் நோபல் பரிசைப் பெற்றனர்.
கடந்த 2010ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்ட சூகி, அண்மையில் நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு அபார வெற்றி பெற்றார். அதன் பின்னர் தாய்லாந்துக்கு பயணம் மேற்கொண்டிருந்தார்.
தற்போது ஐரோப்பிய நாடுகளில் பயணம் மேற்கொண்டுள்ள அவர் நோர்வே சென்றார். அந்நாட்டின் தலைநகர் ஆஸ்லோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சூகி நோபல் பரிசை பெற்றுக் கொண்டு உரையாற்றினார்.





0 comments: on "21 ஆண்டுகளுக்கு பிறகு நோபல் பரிசை பெற்றார் சூகி"
Post a Comment