புதுடெல்லி:தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கையின் பெயரால் முஸ்லிம் இளைஞர்களை வேட்டையாடுவதை கண்டித்து டெல்லியில் ப.சிதம்பரத்தின் வீட்டிற்கு முன்னால் இன்று(வியாழக்கிழமை) தர்ணா நடைபெற உள்ளது.
மனித உரிமைக்காக போராடும் பல்வேறு அமைப்புகள் ஒன்றிணைந்து இந்த தர்ணாவை நடத்துகின்றன. ஐஸா, ஜாமிஆ டீச்சர்ஸ் அசோசியேசன், சோலிடாரிட்டி அசோசியேசன், பி.யு.சி.எல், ஸய்யித் காஸ்மி சோலிடாரிட்டி கமிட்டி, ஜெ.என்.எஸ்.யு, என்.சி.எஃப்.சி, மூவ்மெண்ட் ஃபார் எம்பவர்மெண்ட் ஆஃப் முஸ்லிம் அசோசியேசன், நேசனல் கேம்பைன் ஃபார் தலித் ஹியூமன் ரைட்ஸ் உள்ளிட்ட அமைப்புகள் இந்த தர்ணாவில் பங்கேற்பதாக அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.
News@thoothu





0 comments: on "தீவிரவாத வேட்டை: ப.சிதம்பரம் வீட்டிற்கு முன்பு தர்ணா!"
Post a Comment