தலைப்புச் செய்தி

Thursday, June 14, 2012

ஈராக்கில் மத வழிபாட்டு தளங்களில் அடுத்தடுத்து தொடர் குண்டுவெடிப்பு: 60 பேர் பலி


ஈராக்கின் பாக்தாத் உட்பட சில நகரங்களில் உள்ள மத வழிபாட்டு தளங்களில் அடுத்தடுத்து தொடர்ச்சியாக குண்டுகள் வெடித்தன.
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் ஷியா முஸ்லிம்கள் தங்களது மத வழிபாட்டு தளங்களில் கூடியிருந்தனர். சில இடங்களில் மத ஊர்வலங்களும் நடத்தப்பட்டன.
அந்த நேரத்தில் அப்பகுதிகளில் நிறுத்தப்பட்டிருந்த 2 கார்களில் வைத்திருந்த குண்டு வெடித்தது. இதே போன்று கிர்குக், ஹில்லா ஆகிய 10 இடங்களில் அடுத்தடுத்து குண்டு வெடிப்பு நடத்தப்பட்டது.
இந்த தொடர் குண்டுவெடிப்பில் 65 பேர் பலியானதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் 200க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பினரும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. கடந்த சில நாட்களாக ஈராக்கில் அப்பாவி மக்கள் மற்றும் ஷியா முஸ்லீம்கள் கொல்லப்பட்டு வருவது அங்கே பதட்டமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "ஈராக்கில் மத வழிபாட்டு தளங்களில் அடுத்தடுத்து தொடர் குண்டுவெடிப்பு: 60 பேர் பலி"

Post a Comment