தலைப்புச் செய்தி

Sunday, June 24, 2012

தற்கொலை எண்ணிக்கையில் முதலிடம் வகிக்கும் இந்தியா


உலகிலேயே தற்கொலை மரண விகிதத்தில் இந்தியாதான் முதலிடம் வகிப்பதாக லான்செட் நிறுனத்தின் ஆய்வறிக்கை தெரியவந்துள்ளது. இதில் மிக முக்கியமாக தென் மாநிலங்கள்தான் முதலிடத்தில் இருப்பதாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளன.
இந்தியாவில் மொத்தம் 22% மக்கள் தொகையைக் கொண்டுள்ள தென்னிந்திய மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, ஆகிய நாடுகள் தற்கொலை எண்ணிக்கையில் 42%ஐக் கொண்டுள்ளதாக ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.


2010ம் ஆண்டு ஆந்திராவில் 28,000 பேரும், தமிழகத்தில் 24,000 பேரும், மகாராஷ்டிராவில் 19 ஆயிரம் பேரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மஹராஷ்டிரம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்கள் இணைந்து 15% அளவிற்கு தற்கொலைகள் நடக்கின்றன.


இந்தியாவிலேயே மிகக் குறைந்த எண்ணிக்கையில் டெல்லியில்தான் தற்கொலைகள் நிகழ்கின்றன என்றும் கூறப்பட்டுள்ளது. இதில் 15 வயது முதல் 21 வயது வரையுள்ள இளைஞர்கள் சாலை விபத்திலும், இளம்பெண்கள் பிரசவ நேரத்திலும் குழந்தை பிறக்கும்போது ஏற்படும் கோளாறுகள் காரணமாகவும் தற்கொலை முடிவைத் தேடிக்கொள்கின்றனர்.
சாலை விபத்தில் 14 சதவிகித இளைஞர்களும் பிரசவ காலத்தில் இளம்பெண்கள் 16 சதவிகிதத்தினரும் தற்கொலை மரணங்களில் இறக்கின்றனர்.


2001-03ம் ஆண்டுகளில் இருந்ததை விட தற்போது தற்கொலைகள் 3 மடங்கு அதிகரித்துள்ளது. தென் மாநிலங்களில் தற்கொலை செய்வோரின் எண்ணிக்கை 10 மடங்கு அதிகரித்துள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "தற்கொலை எண்ணிக்கையில் முதலிடம் வகிக்கும் இந்தியா"

Post a Comment