ஜேர்மனியில் பெண்கள் ஆண்களை விட மூன்று மடங்கு அதிகமாக மனநல மருந்துகளை பயன்படுத்துவதாக சமீபத்திய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
ஜேர்மனியின் மிகப்பெரிய சுகாதாரக் காப்பீட்டு நிறுவனமான GEK, மருத்துவர் வழங்கும் மருந்து சீட்டு குறித்து 9.1 மில்லியன் மக்களிடம் ஆய்வொன்றை நடத்தியது.
இதில் ஜேர்மனியில் 1.2 மில்லியன் பேர் தூக்க மருந்துக்கு அடிமையாகி உள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. இவர்களில் மூன்றில் இரண்டு பேர் வயதான பெண்களாகும்.
பெண்கள் இந்த மருந்து இல்லாமல் வாழ இயலாது என்ற நிலை இருப்பதால், தொடர்ந்து மருந்து சாப்பிடுவதன் பின்விளைவுகளைத் தெரிந்தும் பயன்படுத்துகின்றனர்.
45 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் பிள்ளைகள் தங்களை விட்டுப் பிரிந்த பின்பு தனிமையின் கொடுமை தாளாமல் தூக்க மருந்தை நாடுகின்றனர்.
சில பெண்கள் ஒரு பக்கத் தலைவலிக்கும், வயிற்றுவலிக்கும் வலி நிவாரணிகளைத் தொடர்ந்து பயன்படுத்துகின்றனர்.
பெண்களுக்கு வலி நிவாரணிகளைப் பரிந்துரைக்கும் மருத்துவர்கள், ஆண்களுக்கு இருதய நோய்கான மருந்துகளை பரிந்துரைக்கின்றனர்.
பெண்கள் ஆண்டொன்றுக்கு 9.37 முறையும், ஆண்கள் 7.63 முறையும் மருத்துவரிடம் மருந்து எழுதி வாங்குகின்றனர் என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கின்றது.
0 comments: on "மருந்துகளை அதிகளவு உட்கொள்வது பெண்கள் தானாம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்"
Post a Comment