ஜம்மு-காஷ்மீரில் 200 ஆண்டுகள் பாரம்பரியமிக்க சூஃபி தர்காவில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து பொதுமக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டதால் மாநிலம் முழுவதும் பரபரப்பு நிலவி வருகின்றது. |
இன்று காலை தர்காவில் தீ விபத்து குறித்து தகவல் அளித்தும் தீயணைப்பு வாகனங்கள் வர ஒரு மணி நேரத்துக்கும் மேல் தாமதமானதாகக் தெரிகிறது. இதைக் காரணம் காட்டி பொதுமக்கள் குற்றம்சாட்டினர். இதனால் பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து கண்ணீர்ப்புகை குண்டுகள் வீசியும் தடியடி நடத்தியும் பொலிஸார் மக்கள் கூட்டத்தை கலைத்தனர். எனினும் கூட்டம் அதிகமாக இருந்ததால் சம்பவ இடத்தை அடைவதில் சிரமம் ஏற்பட்டதாகவும் வேறு தாமதம் எதுவும் இல்லை என்று தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர். இந்த சம்பவங்களைத் தொடர்ந்து அப்பகுதியில் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டன. இன்று நடைபெற்ற இந்த மோதல்களில் 10 பொலிஸார் உட்பட 20 பேர் காயமடைந்தனர். |
0 comments: on "காஷ்மீரில் 200 ஆண்டுகள் பாரம்பரியமிக்க தர்காவில் தீ விபத்து: 20 பேர் காயம்"
Post a Comment