ஜப்பானின் புகுஷிமா அணு உலை விபத்தால் அதிர்ச்சியடைந்த ஜப்பான் மக்கள், தங்களுக்கு அணு சக்தியே தேவையில்லை என்று கூறியுள்ளனர்.
நிலநடுக்கம் மற்றும் சுனாமி காரணமாக ஜப்பானின் புகுஷிமா அணு மின் நிலையத்தில் ஓராண்டுக்கு முன் விபத்து ஏற்பட்டது. இதனால் அணு மின் நிலையத்தைச் சுற்றியுள்ள மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதனையடுத்து அந்நாட்டில் உள்ள அணு மின் நிலையங்களின் பாதுகாப்பை ஆய்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் அணுசக்தி தேவையா என்பது குறித்து நாளிதழ்கள், தொலைக்காட்சி சேனல்கள் இணைந்து பொதுமக்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தின.
3,000 பேரிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், 80 சதவிகிதம் பேர் அணு சக்தி தேவையில்லை என்றும், 16 சதவிகிதம் பேர் அணு சக்தி தேவை என்றும் கூறியுள்ளனர்.
மின் பற்றாக்குறையைச் சமாளிக்க குறுகிய காலத்துக்கு மட்டும்(மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் வரை) அணு உலைகளை செயல்படுத்தலாம் என்று 53 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர்.
புகுஷிமா அணு மின் நிலையத்திலிருந்து வெளியான கதிர்வீச்சு தடுக்கப்பட்டு, அணு உலை பாதுகாப்பாக உள்ளது என்று அரசு அறிவித்துள்ள போதும், அது குறித்து 92 சதவிகித மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
ஜப்பான் பிரதமர் யோஷிகிஹோ நோடா இந்த ஆண்டின் இறுதியில் எரிசக்திக் கொள்கையில் மாற்றம் கொண்டு வரவுள்ளார். அதில் அணுசக்தியைச் சார்ந்துள்ள நிலையை குறைத்துக் கொள்ளும் கொள்கை முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது.





0 comments: on "எங்களுக்கு அணு சக்தியே தேவையில்லை: ஜப்பான் மக்கள்"
Post a Comment