தலைப்புச் செய்தி

Monday, March 19, 2012

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரவாக இந்தியா வாக்களிக்க வேண்டும் :ஆர்.எஸ்.எஸ்


மனித உரிமைக் கவுன்சிலில், இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கக் கூடாது என்று ஹிந்துத்துவ அமைப்பான ஆர்.எஸ்.எஸ் வலியுறுத்தியுள்ளது.
அந்த அமைப்பின் அதிகாரப்பூர்வ ஏடான ஆர்கனைசர் இதழில் வெளியாகியுள்ள தலையங்கத்தில் இந்தக் கருத்து வலியுறுத்தப்பட்டுள்ளது.
இலங்கையைக் கண்டிக்கும் வகையில் அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை இந்தியா எதிர்க்க வேண்டும் என்றும், இதில் இந்தியா தயக்கம் காட்டினாலோ அல்லது நடுநிலை வகித்தாலோ, பின்னாளில் இந்தியா சிக்கலான நிலைக்குத் தள்ளப்படும் என்றும் தலையங்கத்தில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
"அமெரிக்காவுக்கு உரிமை இல்லை"
ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கவோ, உலக அமைப்பில் அதை சிறுமைப்படுத்தவோ, அமெரிக்காவுக்கும் மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கும் எந்த உரிமையும் இல்லை என்று ஆர்கனைசர் கருத்து வெளியிட்டிருக்கிறது.
இலங்கைத் தமிழர்கள் அந்த நாட்டின் குடிமக்கள். அவர்களுக்காகக் குரல் கொடுக்க வேண்டிய அக்கறையும், பொறுப்பும் இந்தியாவுக்கு இருக்கிறது. அதை இந்தியா செய்துகொண்டிருக்கிறது. ஆனால், மற்ற நாடுகள் இதில் தலையிட முடியாது" என்று கருத்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயிரக்கணக்கான தமிழர்கள், புலிகளால் கொல்லப்பட்டதாகக் குற்றம் சுமத்தியுள்ள ஆர்கனைசர், அந்த நேரத்தில் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள், போர்க் குற்றங்கள் தொடர்பான பிரச்சினை எழுப்பத் தவறியது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளது.


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரவாக இந்தியா வாக்களிக்க வேண்டும் :ஆர்.எஸ்.எஸ்"

Post a Comment